யாருடா சம்மந்தி.. அடிக்க பாய்ந்த கதிர்- குறுக்கே வந்த சக்தி என்ன சொன்னார் தெரியுமா?
“யாருடா சம்மந்தி, அடிச்சி அவமானப்படுத்து போது மறந்துபோச்சா..” என சக்தியிடம் ஜனனி கொந்தளித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது.
படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது. ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.
குணசேகரனுக்கு மணி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு வருகிறது. சக்தி, குந்தவையிடம் கடன் வாங்கி சீர் செய்ய தேவையான அனைத்தையும் வாங்கி விட்டார். ஆனால் இந்த விஷயம் எதுவும் ஜனனிக்கு தெரியாது.
மாறாக, ஆதிரை திருமணம் விடயத்தில் கலாட்டா செய்த ஜான்சி ராணி மொத்தமாக மாறி காவி உடையில் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
மருமகள்களின் குடும்பத்தினரை அழைக்க திட்டம்
இந்த நிலையில், கடைசியாக ஜனனியின் அப்பாவை அழைத்து சீர்ச் செய்ய வைக்குமாறு குணசேகரன் புதிய திட்டமொன்றை போட்டு சக்தி- ஜனனிக்கு இடையில் சண்டை மூட்டியுள்ளார்.
தன்னுடைய அப்பாவை அழைத்திருக்கிறார்கள் என்ற விடயம் கேட்ட ஜனனி, ஆத்திரமடைந்து, “யாரை கேட்டு, ஏ அப்பாவ கூப்பிட்டீங்க.. என கேட்க, அதற்கு விசாலாட்சி, “விசேஷத்திற்கு சம்மந்தியை கூப்பிடாமல் எப்படி?” என்று கேட்க, “இப்போ தான் அவர் சம்மந்தி என்று உங்க கண்ணுக்கு தெரியுதா.. கதிரை வைத்து அவரை அடித்து வெளியில் அனுப்பும் போது அவர் சம்மந்தி என்று தெரியவில்லையா?” என பதில் கேள்வி கேட்கிறார்.
ஜனனி பேசியதை கேட்டு கடுப்பான சக்தி, “என்னடி, உனக்கு பிரச்சனை, அவரே என்கிட்ட நல்ல பேசுறார். நான் சொன்னதும் சரி வரேன் என்று சொல்லிட்டாரு, உன்கிட்ட சொல்லாமல் அவரை கூப்பிட்டது பிரச்சனையா?” என கத்துகிறார்.
சக்தி-ஜனனி தம்பதிக்குள் வெடித்த சண்டை
அப்போது, ஜனனி “ஆமாம் பிரச்சனை தான், என்னை கேட்காமல் கூப்பிட்டது பிரச்சனை தான், எங்க அப்பாவும் உங்க அண்ணன் போல மோசமான ஆளு தான்..” என்கிறார். ஜனனி பேசியதை கேட்ட கதிர், “ ஏய் என்ன வாய்க்கு வந்ததை பேசிகிட்டு போற..” என அடிக்க செல்கிறார்.
அப்போது கதிரை தடுத்து நிறுத்திய குணேசேகரன், “தேவையில்லாமல் வார்த்தையை விடாதே, இருடா என்று சொல்லி..” சமாதானப்படுத்துவது போன்று கதைக்களத்தை மாற்றுகிறார்.
இந்த சண்டையை காரணமாக வைத்து சக்தி, ஜனனியை பிரிக்க குணசேகரன் திட்டம் போட்டு விட்டார்.
இதற்கெல்லாம் சரியான பதிலடியை மணிவிழாவில் ஜனனிக் கொடுக்கப்போவதாக கூறுகிறார். அப்படி என்ன நடக்கப்போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |