ஒரு மாதத்தில் கொத்தாக கொட்டும் முடியை நிறுத்த வேண்டுமா? இந்த இலை போதும்
தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது முடி உதிர்வு தான். முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள்.
இதற்கு வீட்டு வைத்தியம் இருக்க பல கெமிக்கல் பொருட்களின் பெறுபேற்றை அனைவரும் தேடி செல்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நமது அழகை மங்கச்செய்யும்.
எனவே இந்த முடி கொட்டும் பிரச்சனைக்கு கொய்யாஇலை வீட்டு வைத்தியம் செய்தால் ஒரு மாத்திலேயே முடி உதிர்வை குறைக்க முடியும். இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
முடி உதிர்வு
ஆயுர்வேதத்தில், கொய்யா இலைகளைப் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. கொய்யா இலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வேர்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகின்றன.
இதற்கு ஒரு பாத்திரத்தில் 20 முதல் 25 கொய்யா இலைகளை ஒரு ஒரு கப் தண்ணீரில் 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் ஒரு ஸ்ப்ரே போத்தலில் அதை அப்படியே நிரப்பி வைக்க வேண்டும்.
இந்த டானிக்கை முடி வேர்கள் மற்றும் உச்சந்தலையில் நன்கு தெளித்து கைகளால் மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் கழித்து முடியை நன்கு கழுவவும். இந்த முறை இருக்க இன்னுமொரு முறையில் கூட முடியின் வேர்கால்களை வலுப்படுத்த முடியும்.
கொய்யா இலைகளை அரைத்து, அதில் தேங்காய் எண்ணெயைக் கலந்து, முடியின் வேர்களில் தடவி, சிறிது நேரம் விட்டு, பின்னர் முடியைக் கழுவவும்.
இப்படி செய்தால் முடி உதிர்வை தடுக்கலாம்.கொய்யா இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடியைப் பொடுகு பிரச்சனையிலிருந்து பாதுகாக்க முடியும்.
பொடுகு பிரச்சனை ஏற்பட்டால், கொய்யா இலை நீரைப் பயன்படுத்துவது சிறந்தது. கொய்யா இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது மடி வளர்ச்சிக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |