நாள்பட்ட சளிக்கு உடனடி நிவாரணம் தரும் கொய்யா இலை- எப்படி சாப்பிட்டால் பலன்?
பண்டைய காலம் தொட்டு இருமல் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாக கொய்யா இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கொய்யா பழத்தை விட கொய்யா இலையில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன.
இவை அனைத்தும் சளி, இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என ஆயுள் வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அலர்ஜி, தொற்று வர முக்கிய காரணம் சூழலில் இருக்கும் மாசுக்கள் தான். இது போன்ற நோய் நிலைமைகள் வந்தால் ஆங்கில மருத்துவத்தை விட வீடுகளில் செய்யக்கூடிய கை மருத்துவத்தை நாடுவது சிறந்தது.
அந்த வகையில் கொய்யா இலைகளை என்னென்ன நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்? அதனை எந்த முறையில் எடுத்து கொள்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சளி, இருமல் பிரச்சினைகள் உள்ளவர்கள்,
1. கொய்யா இலையில் எசென்ஷியல் ஆயில், நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்படும் பீனோலிக் கலவைகள் என பல்வேறு பயோ ஆக்டிவ் கலவைகள் உள்ளன. இது நுரையீரலில் இருக்கும் சளியை குறைக்கிறது.
கொய்யா இலை டீ
- கையளவு கொய்யா இலைகள் எடுத்து அதனை சில நிமிடங்கள் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
- தண்ணீரை வடிக்கட்டி அதில் கொஞ்சமான தேன் அல்லது எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்க வேண்டும்.
- இப்படி குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சளி, இருமல் கட்டுபாட்டிற்குள் வரும்.
நேரடியாக சாப்பிடுதல்
- காலையில் எழுந்தவுடன் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் கொய்யா இலைகளை நேரடியாக வாயில் போட்டு வெற்றிலை போல் மென்று சாப்பிட வேண்டும்.
- தினமும் சாப்பிடுவதை தவிர்த்து அவ்வப்போது சாப்பிடுவது சிறந்தது. கொய்யா இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அரிப்பு, குமட்டல், வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட கூடும்.
முக்கிய குறிப்பு
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இப்படி பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்து கொண்டால் இன்னும் நலமாக இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |