கொய்யாப்பழங்கள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
நம் நாட்டில் ஏராளமாக கிடைக்கக்கூடிய, விலை மலிவான இந்த கொய்யா பழத்தை குறைவாக மதிப்பிட வேண்டாம்.
விலை உயர்ந்த பல பழங்களில் இருக்கக்கூடிய சத்துக்களை விட இந்த சிறிய கொய்யா பழத்தின் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
நம் மண்ணில் விளையக்கூடிய இது போன்ற பழங்களை வேண்டாம் என்று விலக்கி வைக்காமல் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
கொய்யாப்பழத்தின் நன்மைகள்
நார்ச்சத்துக்களுக்கு சிறந்த ஆதாரமாக இருக்கும் கொய்யாபழத்தில், ஏரளமான சத்துக்களும் அடங்கியுள்ளது.
ஒரு நடுத்தர கொய்யாபழத்தில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளதுடன், செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் செய்கின்றது.
மேலும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் கொய்யாபழம் உதவுகின்றது. வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து காணப்படும்.
வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மட்டுமின்றி இவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செல் சேதத்தைத் தடுக்கவும் உதவுகின்றது.
கொய்யாப்பழங்களில் அதிகளவு பொட்டாசியம் உள்ள நிலையில், இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.
கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
சுவாசக் கோளாறு பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டால் நன்கு நிவாரணம் கிடைக்கும்.
எடையைக் குறைப்பதற்கு சிரமப்படுபவர்களும் கொய்யா பழத்தினை சாப்பிட்டு வந்தால் நல்லதொரு மாற்றத்தினை காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |