குழந்தைகள் விரும்பும் கொய்யா பழ கேக்..! இந்த சிரப் இருந்தால் லேசாக செய்யலாம்
பொதுவாக சீசனுக்கு சீசன் ஒவ்வொரு பழங்கள் காய்க்க துவங்குகின்றது. இதனால் சில பழங்களை குறிப்பிட்ட ஒரு சீசனில் மாத்திரம் தான் பெற்றுக் கொள்ள முடியும்.
அந்த வகையில், வெயில் காலத்தில் மாங்காய் மற்றும் மாம்பழங்களுக்கு பஞ்சமே இருக்காது. அதே போல் மழைக்காலங்களில் கொய்யா சீசன் தொடங்கிவிடும்.
அளவிற்கு அதிகமாக காய்த்து தொங்க ஆரம்பிக்கும். உப்பு, காரம் இருந்தால் இந்த இரண்டு பழங்களும் நம் வாயிக்குள் செல்வதே தெரியாது.
சுவை அந்தளவு அல்டிமேட்டாக இருக்கும். கொய்யா பழங்களில் வெள்ளை கொய்யா, சிவப்பு கொய்யா என்று இரு வகைகளும் உள்ளன.
இரண்டு வகைகளிலும் நிறம், வடிவம், சுவை என வேறுப்பட்டதாக இருக்கும். அந்த வகையில் மழைக்காலங்களில் காய்க்கும் கொய்யா பழங்களை வைத்து மாலை நேர டீக்கு சூப்பரான ஒரு கேக் செய்யலாம். இது குறித்து பூரண விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
கேக் செய்ய தேவையான பொருட்கள்
- மைதா மாவு - 2½கப்/320 கிராம்
- பேக்கிங் பவுடர் - 2½தேக்கரண்டி
- பேக்கிங் உப்பு - ¾தேக்கரண்டி
- உப்பு சேர்க்காத வெண்ணெய்- ½கப்/115 கிராம் (அறை வெப்பநிலையில்)
- சர்க்கரை - 1¼கப்/250 கிராம்
- வெள்ளை நிற முட்டை - 6
- எண்ணெய் - ¼கப்/60 மில்லி லிட்டர்
- பால் - 1கப்/240 மில்லி
- கொய்யா விழுது அல்லது கொய்யா சிரப் - 1கப்/240 மில்லி
- வெண்ணிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
ஃப்ரோஸ்டிங்கிற்கு செய்ய தேவையான பொருட்கள்:
- ஹெவி விப்பிங் கிரீம் - 1கப்/240 மில்லி
- கிரீம் சீஸ் - 8அவுன்ஸ்/230 கிராம்(அறை வெப்பநிலையில்)
- சர்க்கரை - ½கப்/100 கிராம்
- கொய்யா சிரப் - ½கப்/120 மில்லி
செய்முறை
முதலில் கேக்கிற்கு தேவையான சிரப் செய்து கொள்ள வேண்டும். அதாவது நன்றாக பழுத்த கொய்யாப்பழங்களை எடுத்து கழுவி அதன் பின்னர் மிக்ஸி சாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
பின்னர் அதில் சுவைக்காக கொஞ்சமாக சக்கரை சேர்க்கவும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்த “கொய்யா சிரப்” தயார். பின்னர் ஒரு பவுலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக சலித்து எடுத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து வெண்ணெய் மற்றும் சர்க்கரையை மிக்சியில் சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் அடிக்கவும். அத்துடன் முட்டையின் வெள்ளைக்கரு, எண்ணெய் இவை இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் கலந்து கொள்ளவும்.
பால், கொய்யா விழுது , தயாரித்து வைத்த கொய்யா சிரப் , வெண்ணிலா எசென்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து மிக்ஸியில் அடித்து எடுத்து மாவுடன் சேர்த்து கொள்ளவும்.
கலவையை ஓவன் பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை சரியாக ஊற்றி நேரம் சரிபார்த்து வைத்து விடவும். இந்த கேக் செய்வதற்கு சரியாக 20 நிமிடங்கள் வரை எடுக்கும்.
இதனை தொடர்ந்து கேக்கிற்கு ஏதாவது கீரிம்கள் சேர்த்து கொள்ள விரும்பினால் சேர்த்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |