இப்படி சுவையான கொய்யா கேக் செய்து பாருங்க- 10 நிமிடத்தில் காலியாகிவிடும்
கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. கொய்யா சீசன் ஜூன், ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிடும்.
வெள்ளை கொய்யா, சிவப்பு கொய்யா என கொய்யாவில் இரு வகைகள் உள்ளன. கொய்யா பழத்தில் மட்டும் அல்ல, கொய்யா இலை, கொய்யா மரம் ஆகியவற்றில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
சரி கொய்யா பழத்தை வைத்து எப்படி ருசியான கேக் செய்யலாம் என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 3 கப்
பேக்கிங் பவுடர் - 3 ஸ்பூன்
பேக்கிங் உப்பு - அரை ஸ்பூன்
உப்பு சேர்க்காத வெண்ணெய்- அரை கப்
சர்க்கரை - 2 கப்
முட்டை - 6 (வெள்ளை மட்டும்)
எண்ணெய் - அரை கப்
பால் - அரை கப்
கொய்யா - அரை கப்
வெண்ணிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனையடுத்து, வெண்ணெய், சர்க்கரையை மிக்சியில் நன்றாக அரைத்தெடுத்து இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.
இதன் பிறகு, முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும். இறுதியில் எண்ணெய் விட்டு 1 நிமிடம் அடிக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில், பால், கொய்யா விழுது, கொய்யா சிரப், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து இவை தயாரானதும் ஒரு தனி கிண்ணத்தில், பால், கொய்யா விழுது , தயாரித்து வைத்த கொய்யா சிரப் , வெண்ணிலா எசென்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், இதில் மைதா மாவு கலவை கொஞ்சம் கொஞ்சமாக கலவையில் போட்டு நன்றாக கிளற வேண்டும். இதன் பிறகு, ஓவன் அல்லது குக்கரை 10 - 20 நிமிடங்கள் வரை ப்ரீ ஹீட் செய்தால் சுவையான கொய்யா கேக் ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |