கல்யாண மாப்பிள்ளையை இப்படியா வரவேற்பது? வைரலாகும் வீடியோ காட்சி
பொதுவாக இப்போதுள்ளவர்களுக்கு திருமணம் செய்வதே பெரும்பாடாய் ஆகிவிட்டது. இவ்வாறு திருமணம் முடியும் வரைக்கும் பீதியிலேயே வாழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு திருமணம் முடிந்த ஒரு மாப்பிள்ளையை எப்படி வரவேற்பார்கள். பொதுவாக எமக்கு தெரிந்த வகையில் ஆர்த்தி எடுத்துதான் வரவேற்போம்.
ஆனால் இந்தியாவில் மாப்பிள்ளையை வரவேற்ற சம்பவம் ஒன்று வீடியோவாகி பெரும் வைரலாகி வருகின்றது.
திருமண வரவேற்பு
இந்தியா, குஜராத் பகுதியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த புதுமாப்பிள்ளைக்கு இப்படியொரு வரவேற்பா என அனைவரும் ஆச்சரியப்படவைக்கும் வகையில் வரவேற்றுள்ளனர்.
அதாவது, திருமண வீட்டிற்கு வந்த அனைத்து சொந்த பந்தங்களுக்கு முன்னிலையில், சோபாவில் அமர்ந்திருக்கும் மணமகனுக்கு அவரது மாமியார் வாயில் சிகரெட்டை வாயில் வைத்துள்ளார்.
பிறகு மாமனார் அந்த சிகரெட்டைப் பற்ற வைப்பது போல் பாவனை செய்கிறார். பின் அவரே சிகரெட்டை மணமகன் வாயில் இருந்து எடுத்துவிடுகிறார். மேலும், இந்நிகழ்ச்சியில் இனிப்பு வகைகளுக்கு பதிலாக பான் மசாலாவும் கொடுத்திருக்கிறார்கள்.
குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இடம்பெறும் இவர்களின் வழக்கத்தைப் பார்த்து பலரும் பலவிதமான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.