மாப்பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடிய குதிரை: துரத்திக் கொண்டு ஓடும் பெண்வீட்டார்! வைரலாகும் வீடியோ காட்சி
திருமணம வரவேற்று நிகழ்ச்சியில் அரண்டு போன பெண் குதிரை மாப்பிள்ளையுடன் ஓடிய சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
திருமண நிகழ்வு
திருமணம் என்றால் எல்லோருக்குமே பெரிய எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். அந்த திருமணத்தில் திட்டமிட்டப்படி யாருடைய மனதும் கோணாமல் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இரு வீட்டாரிடம் இருக்கும்.
திருமணத்தில் ஏற்படும் பல்வேறு சந்தோசமான நிகழ்வுகளையும், நகைச்சுவையான நிகழ்வுகள் பஞ்சம் இல்லாத அளவுக்கு நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில், திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற நகைச்சுவையான நிகழ்வொன்று தற்போது அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்கும் அளவிற்கு நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான வீடியோ காட்சி ஒன்று தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.
மாப்பிள்ளையுடன் ஓடிய குதிரை
இந்தியாவில், ராம்புரா கிராமத்தில் திருமண நிகழ்வொன்றில் மாப்பிள்ளைக்கு அமோக வரவேற்பு நடத்தும் நிகழ்வொன்று பெண் வீட்டாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் பெண் குதிரை ஒன்றின் மீது அமர்ந்து வந்த மணமகனுக்கு உறவினர்கள் சார்பில் திருமண மண்டபம் வெளியே பட்டாசு வெடித்து பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்போது பட்டாசு சத்தம் கேட்டு அரண்டுப் போன பெண் குதிரை தனக்கு மேலே இருந்த மாப்பிள்ளையுடன் ஓட்டம் பிடித்துள்ளது.
குதிரையின் மீது இருக்கும் மாப்பிள்ளைக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது என நான்கு கிலோமீட்டர் வரை கார் மற்றும் பைக்குகளுடன் அவரைப் பின்தொடர்ந்து சென்றிருந்தனர்.
அப்போது அதிர்ஷ்டவசமாக, மணமகனுக்கு எதுவும் நடக்கவில்லை, பாதுகாப்பாக திருமணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் வீடியோவாக சமூகவலைத்தங்களில் பகிரப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த இணையவாசிகள் மாப்பிள்ளையை கலாய்த்துத் தள்ளுகின்றர்.