மணப்பெண்ணின் காலில் விழுந்த மணமகன்! ஏன் விழுந்தேன் தெரியுமா? மணமகன் கூறும் 9 காரணங்கள்
அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகன் ஒருவர் பணிவாக மணப்பெண்ணின் காலில;் விழுந்து ஆசிர்வாதம் பெறும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக இந்திய கலாச்சாரத்தின் படி நடைபெறும் திருமணங்களில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் காலில் விழுந்து மணப்பெண் ஆசிர்வாதம் பெறுவது வழக்கம்.
அதிலும் இந்து மத திருமணங்களில் இது கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அஜித் வர்வந்த்கார் என்பவர் அவரின் திருமணத்தின் போது மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதற்கான மணமகன் கூறிய 9 காரணங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
वरमाला का कार्यक्रम पूरा हुआ तो दूल्हे ने दुल्हन के कदमों में अपना सर झुका दिया तो शादी समारोह में उपस्थित समस्त घराती और बाराती स्तब्ध रह गये।
— Dr. Ajit Varwandkar (@Varwandkar) May 29, 2021
दूल्हे ने जवाब दिया:
1. मेरी वंश को यही आगे बढ़ाएगी
2. मेरे घर की लक्ष्मी कह लाएगी
(1/4) pic.twitter.com/vy2CkuszLO
மணமகன் கூரும் 9 காரணங்கள்
- என் வீட்டிற்கு செல்வத்தை அளிக்கும் லட்சுமியை அழைத்து வரப்போறவள்.
- என் குழந்தையை பெற்றெடுக்கும் சமயத்தில் மரணத்தை தொட்டு திரும்பப்போறவள்.
- எனக்கு தந்தை என்னும் ஸ்தானத்தை வழங்கப்போறவள்.
- அவளின் அன்புக்குரியவர்களிடம் இருந்து பிரிந்து இனி என்னுடன் பயணிக்கப்போறவள் .
- எனது பரம்பரையை தொடரப்போறவள்.
- இவள் தான் எனது வீட்டின் அஸ்திவாரம்.
- இவளின் நடத்தையால் எனது அடையாளத்தை உருவாக்கபோறவள்.
- அவளின் பெற்றோரை விட்டு என்னுடன் வரப்போறவள்.
என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கபோறவள்.எனக்காக இத்தனை செய்யப் போகும் அவளிற்கு நான் மரியாதை செய்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.
இவ்வாறு மணமகன் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.