மணமேடையில் மணமகனை செருப்பால் அடித்த தாய்: பரபரப்பு காட்சி
திருமணத்தில் மாப்பிள்ளையாக நின்ற மகனை தாய் ஒருவர் செருப்பால் அடித்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தின் பருவா சுமேர்பூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் தனது வருங்கால மனைவியுடன் மேடையில் நின்று கொண்டிருந்த தருணத்தில், அந்த இளைஞரின் தாய் விருந்தினர்கள் முன்பு தனது மகனை செருப்பால் அடித்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் அடுத்தடுத்து நடைபெற வேண்டிய சடங்குகளை அவசர அவசரமாக முடித்துள்ளனர்.
இதற்கு காரணம் என்னவெனில், தனது மகன் வேற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதால் ஏற்பட்ட அதிருப்தி என்று கூறப்படுகின்றது.
மேலும் குறித்த இளைஞரின் திருமணம் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், தற்போது நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு, மணமகனின் வீட்டில் யாருக்கு அழைப்பு கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.