மேடையில் மணமகனின் தொடையில் விழுந்த நண்பன்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
திருமணங்கள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது, ஆட்டம், பாட்டம் என சொந்த பந்தங்கள், நண்பர்களுடன் களைகட்டும்.
அதிலும் சில வேடிக்கையான நிகழ்வுகளும் அரங்கேறிவிடும், அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.
அந்த வீடியோவில், மணமக்கள் மேடையில் அமர்ந்திருக்க நண்பர்கள் பணமழையால் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
அப்போது மணமகனின் அருகே நண்பர் ஒருவர் அமர, தெரியாமல் அவர் தொடை மீது விழுந்து விடுகிறார்.
இதனால் டென்ஷனான மாப்பிள்ளை, இங்கிருந்து போ என கோபத்துடன் தள்ளிவிடுகிறார், அடுத்த நிமிடமே சுதாரித்துக் கொண்ட நண்பன் மறுபடியும் அமர்கிறார்.
இந்த வீடியோ வெளியாக பலரும் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர், நண்பர் குடிபோதையில் இருந்திருக்கலாம், சிறிய தவறுக்காக இப்படியா கோபப்படுவது? என கேட்டு வருகின்றனர்.