திருமண மேடையில் ஆக்ரோஷமாக மாறிய மாப்பிள்ளை! பரிதவித்து நின்ற மணப்பெண்
மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனை நண்பர் ஒருவர் சீண்டிய நிலையில், ஆக்ரோஷமான மாப்பிள்ளை சரமாரியாக தாக்கிய காட்சி வைரலாகி வருகின்றது.
திருமணம் என்றாலே பல சுவாரசியமாக நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் மணமக்களின் நண்பர்கள் செய்யும் அலப்பறையே வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
இங்கு அதுபோன்ற சம்பவம் நடத்த திட்டமிட்டிருந்த நண்பருக்கு பாரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆம் மணமேடையில் மணப்பெண் அருகில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையின் கன்னத்தை அவர் நண்பர் ஒருவர் பிடித்து ஆட்டியுள்ளார்.
இதனால் கடுப்பின் உச்சத்திற்கு சென்ற மாப்பிள்ளை குறித்த நண்பரை சரமாரியாக தாக்கியதோடு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்தும் விடாமல் தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ளார்.
மாப்பிள்ளையின் எல்லையில்லாத கோபத்தை கண்ட மணப்பெண் தடுக்க முயன்றும் முடியாமல் போயுள்ள நிலையில், பரிதாப நிலைக்கு சென்றுள்ளார்.