மணமேடையில் மாப்பிள்ளை வாங்கிய தர்மஅடி! ஆவேசத்தில் மச்சினிச்சி செய்த காரியம்
திருமணத்தில் குடி போதையில் வந்த மாப்பிள்ளை மாலையை மணப்பெண் தங்கைக்கு அணிவித்த நிலையில், மணமேடையில் தர்ம அடி வாங்கியுள்ளார்.
குறித்த காட்சியில் மணமகன் குடி போதையில் மணமேடைக்கு வந்த நிலையில், மணமகளின் தங்கை கோபத்தில் சத்தம் போட்டுக்கொண்டு ஆரத்தி எடுத்துவிட்டு, கையில் வைத்திருந்த மாலையை மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, மணப்பெண் கழுத்தில் போடுமாறு கூறுகின்றார்.
ஆனால் குறித்த மாப்பிள்ளை போதை தலைக்கு ஏறிய நிலையில் தள்ளாடிக்கொண்டு நிற்கின்றார். மணப்பெண் மாலையை மாப்பிள்ளை கழுத்தில் போட்ட பின்பு, மாப்பிள்ளையோ மணப்பெண்ணின் தங்கையின் கழுத்தில் போட்டுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த மச்சினிச்சி மாப்பிள்ளையை சரமாரியாக கன்னத்தில் அடித்துள்ளனர். மணமகள் வேண்டாம் என்று தடுத்தும் நிறுத்தாமல் அவரது தாங்கை மாப்பிள்ளையை தாக்கியுள்ளார்.
பீகாரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
बिहार में शराबबंदी बा ... ????? pic.twitter.com/MiWYfF2N2T
— Vikki1975 (@Vikki19751) June 21, 2022