க்ரில் சிக்கன் சாப்பிட்ட குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்... உஷார் மக்களே
சென்னையில் கிரில் சிக்கன் கடையில் வாங்கி சாப்பிட்ட குடும்பத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரில் சிக்கனால் வந்த வினை
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் உணவுமுறைகளை மாற்றி வருகின்றனர். அதிலும் சைனிஸ் வகையான உணவுகள், சிக்கன் வகைகளையே விரும்பி சாப்பிடுகின்றனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் தற்போது தமிழகத்தில் கிராமங்கள் வரை கிடைக்கின்றது. இதன் சுவையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாகியுள்ளனர்.
இதனால் இன்று பல புதிய உணவகங்கள் தோன்றியுள்ளது. ஆனாலும் சில உணவகங்களில் தரமில்லாத உணவுகள் வழங்கப்படுவது மக்களின் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்துகின்றது.
இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கத்தில் ஹொட்டல் ஒன்றில் சிக்கன் நூடுல்ஸ், கிரில் சிக்கன் இவற்றினை மர வேலை செய்பவர் தனது குடும்பத்துடன் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
குறித்த உணவுகளை சாப்பிட்ட உடன் குறித்த நபர் அவரது மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் என அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் குறித்த உணவகத்தில் உணவின் தரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.