சிக்கன் பிரியரா நீங்கள்! தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த பிரச்சினைகள் எல்லாம் வருமாம்!
பொதுவாக சிலருக்கு சிக்கன் என்றாலே கொள்ளைப் பிரியம். நாளொன்று ஒரு வேளையாவது சிக்கனை எடுத்துக்கொள்பவர்களும் இருப்பார்கள், கிழமையில் ஒரு தடவை சரி உண்ணபவர்களும் இருப்பார்கள்.
அசைவ உணவுகளை விரும்பி உண்பவர்களின் 75 சதவீதமானவர்கள் இந்த சிக்கனை விரும்பி சாப்பிடுபவர்கள்தான். சிக்கனைக் கொண்டு வித விதமாக சமைத்து சாப்பிடுவார்கள்.
சிக்கனில் புரோட்டீன் மற்றும் பிற சத்துக்கள் எல்லாம் இருந்தாலும் அதை அளவோடு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக தினமும் சாப்பிட்டால் எமது உடலுக்கு பாதிப்பு ஏற்படும்.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு
- உடல் எடை அதிகரிக்கும்
- இதயம் பாதிக்கப்படும்
- சில சமயங்களில் உணவு விசமாகும்
- இரத்த லிப்பிட்டுகளின் அளவை உயர்த்தும்
- கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கும்
- உடலில் அதிக சூட்டை கிளப்பும்
- உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்
- அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினை
- சிறுநீர் பாதை தொற்று
- கார்டியோவாஸ்குலர் நோய்கள் ஏற்படும்
- மூட்டுவலி பிரச்சினை
சிக்கன் போன்ற விலங்கு அடிப்படையான புரதச்சத்தை அதிகமாக சாப்பிடுவது, உடல் எடையைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுத்தலாம். தினமும் இறைச்சி சாப்பிடுபவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் குறைந்த BMI கொண்டுள்ளனர்.
மேலும், ஊசிகளின் மூலமாக பிராய்லர் கோழிகள் தசை வளர்ச்சி ஏற்றப்படுவதால் மிக குறைந்த வயதிலேயே பெண்கள் பருவம் அடைவார்கள் அதனால் அவர்களுக்கு பிராய்லர் கோழி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் இரைப்பை கோளாறுகள், கல்லீரல் செயலிழப்பு, மஞ்சள் காமாலை என பல உடல்நலக் கோளாறுகள் உண்டாகும்.
மேலும், பிராய்லர் கோழி கால்கள் மிகவும் நஞ்சானது.