இளம் வயது நரைமுடி - தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருள் கலந்து பூசுங்க
நரைமுடி என்றால் யாருக்கும் பிடிக்காது. நரைமுடி இருப்பது சிலரை தன்னம்பிக்கை இழக்கச்செய்யும். இது வயது வந்தோருக்கு வருவது சாதாரணம். ஆனால் சிறுவயதில் நரை முடி வருவது நம்மை அசாதாரணமாக உணரச்செய்யும்.
இதற்காக பலர் பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த பொருட்கள் ஒரு குறுகிய காலம் மட்டுமே நமக்கு நன்மை தருவது போல ஏமாற்றும்.
ஆனால் இயற்கையில் கிடைக்கும் எந்த பொருட்களும் இதுபோன்ற தீங்கை தருவதில்லை. எனவே இந்த பதிவில் இளநரைமுடிக்கு தேங்காய் எண்ணெயில் சேர்க்க வேண்டிய பொருட்கள் பற்றி பார்க்கலாம்.

நரை முடிக்கு தீர்வு
நெல்லிக்காய் பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் - நெல்லிக்காய் பொடி மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து சூடாக்கவும்.
ஆறிய பிறகு, இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். இது முடியை கருமையாக்கி ஆரோக்கியமாக்கும்.

மருதாணி பொடி காபி டிகாஷனில் மருதாணி பொடியை கலந்து பேஸ்ட் செய்து, நரைத்த முடியில் தடவவும். இது முடியை கருமையாக்கி, பளபளப்பாக்கும். வெங்காய சாற்றில் தேன் கலந்து தலையில் தடவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
கறிவேப்பிலை கறிவேப்பிலையை தயிருடன் அரைத்து வாரமொருமுறை தடவினால் முடி கருமையாகும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தடவினால் முடி வலுப்பெறும். தேங்காய்ப் பாலில் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |