பச்சை தக்காளி கூட்டு செய்யணுமா?வெங்கடேஷ் பட்டின் ரெசிபி இதோ
தக்காளி வீட்டில் நாம் எல்லோரும் சமையலுக்கு சேர்க்ககூடிய ஒரு காய்கறியாகும்.வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். மற்றும் இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளும் வராது.இந்த தக்காளியை வைத்து செஃப் வெங்கடடேஷ் பட்டின் ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துருவிய தேங்காய் 1 மூடி
- 2 ஸ்பூன் பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் சீரகம்
- தேங்காய் எண்ணெய் 3
- 1 ஸ்பூன் கடுகு
- 6 வத்தல் மிளகாய்
- 3 ஸ்பூன் நறுக்கிய பூண்டு
- 2 வெங்காயம் நறுக்கியது
- பச்சை தக்காளி 8
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கொத்து கருவேப்பிலை
- உப்பு 50 கிராம்
- பாசி பருப்பு 20 கிராம்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- பெருங்காயப் பொடி
செய்முறை
மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கடுகு, கருவேப்பிலை, வத்தல் சேர்க்கவும். தொடர்ந்து பூண்டு நறுக்கியதை சேர்க்கவும்.
தொடர்ந்து வெங்காயம் நறுக்கியதை சேர்த்து கிளர வேண்டும். பிறகு தக்காளி நறுக்கியதை சேர்த்து நன்றாக வேகும் வரை கிளர வேண்டும். அரைத்த விழுதை சேர்த்து கிளரவும்.
தொடர்ந்து இதில் மஞசள் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து அவித்த பாசி பருப்பு, கடலை பருப்பை சேர்த்து கிளரவும். கடைசியாக பெருங்காயப் பொடி, மேலாக 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளரவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |