Green Tea: க்ரீன் யாரெல்லாம் குடிக்கக்கூடாது? பலரும் அறியாத உண்மை
இன்று பெரும்பாலான நபர்கள் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள கிரீன் டீ பருகி வருகின்றனர். ஆனால் இவற்றை யார் குடிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்று அதிக அளவில் க்ரீன் டீ மக்களை கவர்ந்து வருகின்றது. இதில் உடம்பிற்கு நன்மை விளைவிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.
அதிலும் உடம்பை குறைக்க நினைப்பவர்கள் க்ரீன் டீயை அதிகமாக குடீத்து வருகின்றனர். நன்மை விளைவிக்கும் சத்துக்கள் இருந்தாலும் இவை உடம்பிற்கு ஏற்றது கிடையாதாம்.
சிலருக்கு வாந்தி, நெஞ்செரிச்சல் போன்றவற்றைத் தூண்டுகின்றது. யாரெல்லாம் இந்த டீயை பருகக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
க்ரீன் டீ யார் குடிக்கக்கூடாது?
மருந்துமாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் க்ரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மருந்துகளுடன் வினைப்புரிந்து உடம்பிற்கு தீமை விளைவிக்கின்றது.
மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் க்ரீன் டீ குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை குமட்டல் வாந்தியை ஏற்படுத்தும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் க்ரீன் டீ குடித்தால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். ஆகவை க்ரீன் டீ குடீப்பதை தவிர்க்கவும்.
எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அல்லது வேறெனும் எடைகுறைப்பு மருந்து எடுப்பவர்கள் க்ரீன் குடிக்கக்கூடாது. ஏனெனில் இவர்களின் இரத்த அடர்த்தியானது சற்று குறைவாக இருக்கும் நிலையில், இரத்த அடர்த்தி இன்னும் குறைந்துவிடுமாம்.
சிலருக்கு கார்ஃபைன் நிறைந்த உணவுகள் சேராமல் இருப்பவர்கள் க்ரீன் டீயை அதிகமாக குடித்தால் ஹைப்பர் டென்ஷன், நரம்பு பலவீனம் மற்றும் தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.
க்ரீன் டீ-யில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும், இதற்கு இணையான சத்துக்கள் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளும் உள்ளது. ஆகவே டீ குடிக்க நினைப்பவரகள் இஞ்சி, புதினா, மஞ்சள் போன்ற டீ-யை குடிக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |