இலங்கை பெண்ணால் கிளம்பிய புது சர்ச்சை! வைரலாகும் மதுவின் கிரீன் டீ விளம்பரம்..இது தேவையா?
இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா அவரின் தோழி சுருதியுடன் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை கிழப்பி வருகின்றது.
இவர்கள் இருவருமே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார்கள்.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மதுமிதா தற்போது ஆடை வடிவமைப்பாளராக மாறியிருக்கிறார். மாடலிங்கில் மிகுந்த ஆர்வமுடையவராக இருக்கிறார். இவரின் கொஞ்சும் தமிழை ஏராளமானோர் ரசித்து கேட்டனர்.
இந்நிலையில், சுருதி பெரியசாமி மற்றும் மதுமிதா இருவரும் கையில் கண்ணாடி கிளாசுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுபானா விளம்பரம் போல இருக்கும் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் கொந்தளித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
எனினும் அவர் it's only Green Tea என பதிவிட்டுள்ளார். ஒரு சிலர் கொரோனா 3 அலை பரவும் நேரத்தில் இது போன்ற விளம்பரம் தேவையா என்று குறிப்பிட்டு வருகின்றனர்.