எலும்புகளை சொத்தையாக்கும் கீரைகள்.. இத தெரியாமல் இனி சாப்பிடாதீங்க!
பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
அந்த வகையில் கீரைகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனின் கீரைகளை அதிகமான கால்சியம் சத்து இருக்கின்றது.
இது முடி வளர்ச்சி, எலும்புகளின் ஆரோக்கியம், நகம் பாதுகாப்பு, சரும பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வளிக்கின்றது.
ஆரோக்கியம் என்பதற்காக பச்சையாக இருக்கும் அனைத்து கீரைகளையும் சாப்பிடக் கூடாது. சிலரின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கீரைகளும் இருக்கின்றன.
இந்த கூற்றின் படி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பச்சை கீரைகள் தொடர்பாக தெரிந்து கொள்வோம்.
எலும்பை கீரை பலவீனப்படுத்துமா?
ஆம், எலும்புகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக கீரைகள் பலவீனமடைய செய்கின்றன. ஏனெனின் கீரைகளில் அதிகமான கால்சியம் இருக்கின்றன.
அத்துடன் ஆக்சலேட்டும் உள்ளது. இது கால்சியம் உறிஞ்சளை கட்டுபடுத்துகின்றது. இதனால் எலும்புகளுக்கு செல்லும் கால்சியம் சரியாக எலும்புகளுக்கு சேராமல் எலும்புகள் வலுவிழந்து போகின்றன.
கீரையால் ஏற்படும் பாதிப்புகள்
1. இரவு நேரங்களில் பாலையும் கீரையும் ஒன்றாக எடுத்து கொள்ளும் போது பாலில் உள்ள கால்சியத்தை சரியாக உடலால் பெற்றுக் கொள்ள முடியாது. இதற்கு முக்கிய காரணம் கீரைகளில் உள்ள சில பதார்த்தங்கள் தான்.
2. வேறு எந்தவிதமான கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையும் கீரையுடன் சேர்த்து எடுத்து கொள்ளக்கூடாது.
முக்கிய குறிப்பு
இது ஒரு பதிவு மட்டுமே மேலதிக தகவல் தேவைப்படும் போது மருத்துவர்களை நாடவும்.