சளி, இருமலை விரட்டியடிக்கும் பச்சை மிளகாய்.. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இனிப்பான உணவுகளை தவிர்த்து காரமான உணவுகளை சாப்பிட விரும்புவார்கள்.
ஆனால் காரம் சாப்பிட்டால் சளி, இருமலை அதிகப்படுத்திவிடும் என்று கருதி சிலர் சாப்பிட தயங்குவார்கள்.
சமையலில் காரத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களில் பச்சை மிளகாயும் ஒன்று. இந்த மிளகாய் காரத்திற்காக மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படுகின்றது.
இதன்படி, சளி, இருமல் பிரச்சினையுள்ளவர்கள் பச்சை மிளகாயை சமையலில் அடிக்கடி சேர்த்து கொண்டால் சளியின் வீரியத்தை குறையும் என கூறப்படுகின்றது.
அந்த வகையில் பச்சை மிளகாய் எப்படி சளி, இருமலை கட்டுபடுத்துகின்றது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
பச்சை மிளகாய்
1. பச்சை மிளகாயில் கேப்சைசின் என்ற சேர்மம் உள்ளது. அது சளியை வெளியேற்றி சுவாசத்தை சீராக்குகின்றது. மேலும் பச்சை மிளகாயில் பைட்டோநியூட்ரியண்ட்கள் இருக்கின்றது. இதுவும் சுவாச பாதையை தளர்வாக்க துனை புரிகிறது.
2. வெட்டுக்காயம் உள்ளிட்ட காயங்களால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்து சாப்பிடலாம். இது காயங்களை விரைவில் குணப்படுத்தும்.
3. வலியை கட்டுப்படுத்தவும் மன நிலையை மேம்படுத்தவும் பச்சை மிளகாய் உதவியாக இருக்கின்றது.
4. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க பச்சை மிளகாய் உதவியாக இருக்கின்றது. அத்துடன் நெஞ்செரிச்சலையும் கட்டுபடுத்துகின்றது.
முக்கிய குறிப்பு
பச்சை மிளகாயில் இப்படி ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் அளவிற்கு அதிகமாக பயன்படுத்தும் போது வேறு வழியில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.