நீலம் & பச்சை கோழி முட்டைகள் - இந்த முட்டைகளுக்கு பின்னே இருக்கும் மர்மம் என்ன?
சாதாரணமாக நாம் சாப்பிடும் முட்டைகள் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். குழந்தை வயதிலிருந்து இவைகளையே சாப்பிட்டு வளர்ந்தோம். பிறகு, "பழுப்பு முட்டை சத்து அதிகம், தேசி முட்டை நலம் தரும்" என்ற நம்பிக்கையோடு பழுப்பு முட்டைகள் பிரபலமானது.
ஆனால் இது தவறான நம்பிக்கை தான். இதைவிட ஆச்சரியமளிப்பது, நீலம் மற்றும் பச்சை நிற முட்டைகள் கூட கோழிகளால் தான் இடப்படுகின்றன என்பதே. இதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.
Araucana கோழிகள்
அரௌகானா கோழிகள் சாதாரண கோழிகளைப்போல் தான் தோற்றமுடையவை. ஆனால் அவற்றுக்கு வால் இல்லை, காதுகளில் இறகு உள்ளது.
இந்த இறகுகள் ஒரு பெரிய மீசை போன்ற தோற்றத்தை தரும் – அதுவே இவற்றை வேறுபடுத்துகிறது. இந்த இனத்தை முதன்முதலில் 1914-ல் ஸ்பானிய பறவையியலாளர் சால்வடார் காஸ்டல் கண்டுபிடித்தார்.
கோழிகள் சிலியின் 'அரௌகானா' பகுதியில் இருந்ததால், அந்தப் பெயரே இப்பறவைகள் பெற்றது.
ஆலிவ் எக்கர் கோழிகள்
இந்த கோழிகள் அரௌகானா + மாரன் இனங்களின் கலப்பில் உருவானவை.
வாரத்துக்கு சுமார் 4–6 பெரிய பச்சை முட்டைகள் இடும்.
அவை வெளியிடும் முட்டைகளுக்கு ஆலிவ்-பச்சை நிறம் இருக்கும்.
முட்டையின் சத்து – நிறத்தின் அடிப்படையில் அல்ல
வெள்ளை, பழுப்பு, நீலம், பச்சை என எந்த நிறத்தில் முட்டை இருந்தாலும், அதன் உண்மையான முக்கியத்துவம் அதன் உட்பகுதி சத்துத்தன்மையில் தான்.
முட்டையின் நிறம் என்பது வெறும் கோழி இனத்தின் இயல்பு மட்டுமே. அது முட்டையின் சத்து அல்லது பாதுகாப்பு குறித்த தகவலை குறிப்பிடுவதில்லை. எனவே, முட்டையைத் தேர்ந்தெடுக்கும் போது, அதன் தரமும் சுத்தமும் முக்கியம் — நிறம் அல்ல.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |