தயிருடன் உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா?
தயிர் மற்றும் உலர் திராட்சையை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதில் தயிர் ஒரு புரோபயோடிக் போன்றும், உலர் திராட்சையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து ப்ரீபயோடிக் போன்றும் செயல்படுகிறது.
தயிருடன் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடும் போது, செரிமான மண்டலத்தில் இடையூறை உண்டாக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். அதோடு கெட்ட பாக்டீரியாக்கள் தான் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் காரணமும் கூட.
அதிக கொழுப்புள்ள மற்றும் காரமான உணவுகளை உண்பது பெரும்பாலும் குடலின் சுவர் பகுதியில் அழற்சியை ஏற்படுத்தும். உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது, குடலில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவிபுரியும்.
தயிருடன் உலர் திலாட்சையை சேர்த்து சாப்பிடும் போது, அது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி, உள்ளுறுப்புக்களை சீராக செயல்பட வைக்கும்.
உலர் திராட்சை மற்றும் தயிர் இரண்டிலுமே கால்சியம் அதிகளவில் உள்ளது. இந்த ஊட்டச்சத்து எலும்புகளை வலுவாக்கவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவி புரியும். குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அது வாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மதியம் உணவு உண்ட பின் தயிரில் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடுங்கள்.