சேலையை வாரிப்பிடித்துக் கொண்டு ஓட்ட பந்தயத்தில் பறந்த பாட்டி! யாழில் சம்பவம்
சேலையை வாரி பிடித்துக் கொண்டு 75 வயது மூதாட்டியொருவர் ஓட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீடியோக்காட்சி இக்கால இளைஞர்களை வியக்க வைத்துள்ளது.
வைரலாகும் செய்தி
தற்போது இணையப்பக்கங்களுக்கு சென்றாலே இது போன்ற வீடியோக்கள் தான் முன்நின்று எம்மை வரவேற்கின்றன.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான வீடியோக்களை பார்ப்பதற்கு நல்லதொரு பொழுதுபோக்காக இருக்கிறது.
இதனால் தான் இக்காலத்தில் உள்ளவர்கள் அவர்களின் வாழ்க்கையில் அரைவாசி நாளை செல்போனில் செலவிடுகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இது போன்ற வேடிக்கை வீடியோக்கள் தான் நிரம்பி கிடக்கின்றன.
சேலையை வாரிப்பிடித்து கொண்டு ஓடிய பாட்டி
இந்த நிலையில், இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாட்டியொருவர் தனது 75 வயதில் சக போட்டியாளர்களை விட அதிகமாக ஓடி ஓட்ட பந்தயத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.
இந்த காட்சியை பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாக இருந்தாலும் இவர்களின் சாகசம் இவரின் வயதில் இருக்கும் மற்றைய பாட்டிமார்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாகும்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ சேலையை வாரி பிடித்துக் கொண்டு நெருப்போட்டம் ஓடிய மூதாட்டி” என கமண்ட் செய்து வருகிறார்கள்.