அண்ணாமலையை அசிங்கப்படுத்திய வயதான பாட்டி! ட்ரண்டாகும் காணொளி.... குஷியில் நெட்டிசன்கள்
பருவ மழையின் தீவிரம் காரணமாக சென்னை தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் பாஜகா தலைவர் அண்ணாமலையின் காணொளி அவ்வப்போது ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.
தமிழகம் முழுவதும் மழையின் காரணமாக பல மாவட்டங்களில் இயல்வுநிலை பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகின்றார். நேரடியாக களத்தில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டுவரும் ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரே இருக்கின்றது.
ஆனாலும் தமிழக முதல்வரின் செயலில் குற்றம் கண்டுபிடிப்பதை வழக்கம் வைத்திருக்கின்றனர் பல கட்சியினர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்னை வெள்ளத்தில் மக்களின் நிலையைக் கண்டு குறை கூறி வருகின்றார்.
சமீபத்தில் இவர் பாதிக்கப்படட மக்களை படகு ஒன்றில் காணச் செல்வது போன்று போட்டோஷுட் நடத்தியதை நெட்டிசன்கள் வெச்சி செய்தனர். இந்நிலையில் ஸ்டாலினின் தொகுதியான சென்னை கொளத்தூரில் மக்களை சந்திக்க சென்ற அண்ணாமலைக்கு வயதான பாட்டி ஒருவர் தக்க பாடம் கற்பித்துள்ளார்.
முதல்வர் தொகுதி எப்படி இருக்குது என்று பாக்க வந்தேங்கம்மா என்று கொங்கு தமிழில் அழகாக அவர் கேட்கிறார். அடுத்த நொடியே அந்த பாட்டி பேசியது தான் இப்போது விஷயமே….
ஸ்டாலின் என்ன பண்ணுவாரு பாவம்… அவரு நேத்து வந்தவரு.. நீங்க இன்னா பண்ண போறீங்க அத சொல்லுங்க என்று சென்னை பாஷையில் பாயிண்ட்டை புடிக்க… பண்ணுவோம்… அதற்கு தானே வந்திருக்கிறோம் என்று பதிலளிக்கிறார்.
இந்த வீடியோதான் இப்போது சக்கபோடு போடுகிறது. மக்களை யதார்த்தமாக சந்தித்து, குறைகளை கண்டு களையும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி வருகிறார் அண்ணாமலை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
அ.மலை: முதல்வர் தொகுதி எப்டி இருக்குன்னு பாக்க வந்தேன்.
— நிருபர் பரம்பொருள் (@paramporul) November 9, 2021
பாட்டி : “ஸ்டாலின் என்ன பண்ணுவாரு பாவம். அவரு நேத்து வந்தவரு. நீங்க இன்னா பண்ணப் போறீங்க அத சொல்லு..” ??
அன்பு பாட்டி மொத்தமா முடிச்சி விட்டாங்க.
இவரு போட்டோ ஆப் பண்ணப் போய் நமக்குத்தான் லட்டு லட்டா கண்டெண்டு? pic.twitter.com/DfIyuJTKhX