கடலை மாவை கோடையில் முகத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அழகு அதிகரிக்குமாம்
கோடை காலத்தில் பளபளப்பாக வைக்க கடலைமாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
பொதுவாக அனைவரும் பிரகாசமான, பளபளப்பான மற்றும் மென்மையான சருமம் வேண்டும் என்று தான் விரும்புவார்கள். இதற்காக பலர் பலவிதமான ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் விருப்பப்படி சருமத்தை பெற்றாலும், பலர் சருமம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், கோடை காலத்தில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்ற பிரச்சனைகள் வரும். இது முகத்தின் பளபளப்பைக் குறைப்பது மட்டுமில்லாமல், முகத்தின் அழகைக் கிடைத்துவிடும்.
இவற்றை குணப்படுத்த பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக கடலை மாவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதன் உதவியுடன் முகத்தில் இருக்கும் பருக்கள், தழும்புகளை சுலபமாக நீக்க முடியும். கூடுதலாக முகம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் மாறும். எனவே கடலை மாவை பயன்படுத்தி முகத்தை அழகாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
கடலை மாவை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது?
கடலை மாவு முகத்திற்கு பயன்படுத்துவது நல்லது. ஆனால் இது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. முகத்திற்கு கடலை மாவு போடுவதால் அதன் முழு பலனைப் பெற எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. கடலை மாவு - எலுமிச்சை:
2 ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை உங்கள் முகம் முழுவதும் தடவி, சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.
நன்மை : எலுமிச்சை சாற்றில் இருக்கும் சிட்ரிக் அமில முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கருமையை குறைக்க பெரிதும் உதவும். கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலவையானது சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கும் மற்றும் முகத்திற்கு பளபளப்பை கொண்டு வரும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
2. கடலை மாவு - தயிர்:
2 அல்லது 3 ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் தயிர் கலந்து அந்த பேஸ்ட்டே முகம் முழுவதும் தடவி நன்கு காய்ந்த பிறகு முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.
நன்மை : இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தழும்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் சருமத்தை பள பளப்பாக வைத்திருக்க உதவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.