கடலை மா முகத்திற்கு போடுங்க.. முகப்பருவுடன் சேர்த்து 6 வகையான பிரச்சினைகள் தீரும்!
எமது முன்னோர்கள் ஆரம்ப காலங்களில் குளிப்பதற்காக கடலை மாவு மற்றும் பயத்தை மாவை பயன்படுத்தி வந்தார்கள்.
இவை சரும அழகிற்கும், பராமரிப்பிற்கும் உதவியாக இருக்கும். முகத்திற்கு கடலை மா பயன்படுத்தும் பொழுது சரும பராமரிப்பு சீராக நடக்கும் என ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் உறுதிச் செய்துள்ளார்.
இந்தியர்கள் வீடுகளில் அழகை மேம்படுத்த மஞ்சள் மற்றும் கடலை மாவு பேஸ்ட் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதில் உள்ள மஞ்சள் கிருமி நாசினிகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளாக செயற்படும். அதே சமயம், கடலை மாவு சருமத்தின் அழுக்குகளை சுத்தம் செய்து பிரகாசமாக்க உதவியாக இருக்கிறது.
அந்த வகையில், மஞ்சள் மற்றும் கடலை மாவு பேஸ்ட்டை முகத்தில் தடவுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
கரும்புள்ளி
கடலை மா தேவையான அளவு எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கொஞ்சமாக கலந்து விட்டு, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு கழுவி வர வேண்டும். இதனை வாரத்திற்கு 3 தடவைகள் செய்து வந்தால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறையும்.
முடிகள் நீங்க வேண்டும்.
கடலை மாவு உடன் வெந்தய பொடி சம அளவு ,கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன் எடுத்து தயிரில் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் காய விட்டு கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்திலுள்ள முடிகள் மறையும்.
கருமை
கடலை மாவு ஒரு ஸ்பூன், எலுமிச்சை ஒரு ஸ்பூன் மற்றும் தயிர் கலந்து முகத்தில் தடவி, சரியாக 45 நிமிடங்கள் வரை காய விட்டு, கழுவ வேண்டும்.
குழந்தைகள் குளிப்பதற்கு கடலை மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சள், பைத்த மாவு கலந்து பயன்படுத்தினால் அவர்கள் பருவம் அடையும் பொழுது சருமத்தில் ஒருவிதமான பிரகாசம் இருக்கும். அத்துடன் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். சிலரின் சருமம் வறண்டு போனது போன்று இருக்கும்.
இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கடலை மாவை தொடர்ந்து பயன்படுத்தும் போது சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும்.
மேலும் இறந்த செல்களை நீங்கி, முகத்திலுள்ள சுருக்கங்கள் மறையும். சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையம் இருக்கும். இது போன்ற சரும பிரச்சினைகள் அனைத்தும் கடலை மாவு பயன்படுத்தினால் மறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |