மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவாரா ஜிபி முத்து?
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கிய நாளில் இருந்தே ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர் ஜிபி முத்து.
நேற்று தன் மகனுக்காக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
யார் இந்த ஜிபி முத்து?
தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடியை சேர்ந்தவர் ஜிபி முத்து, டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் சர்ச்சையில் சிக்கினார்.
தொடர்ந்து டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னரும், யூடியூப் வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
தலைவரே என செல்லமாக ஜிபி முத்துவின் ரசிகர்கள் அழைக்க, அவரது தூத்துக்குடி ஸ்டைல் பேச்சுக்கே பலரும் அடிமை.
இதன் மூலம் பெற்ற புகழை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட ஜிபி முத்து பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார்.
திடீரென வெளியேறினார்
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கிய நாளில் இருந்தே ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் ஆர்மி தொடங்கிவிட்டனர்.
முதல் ஆளாக உள்ளே நுழைந்த ஜிபி முத்து, ஆதாமா அது யாரு என கேட்டது டிரெண்டானது.
கமல்ஹாசனே நானும் உங்கள் ரசிகன் என கூற, ரசிகர்கள் மேலும் உற்சாகமாகினர்.
வீட்டிற்குள்ளும் யாரையும் கஷ்டப்படுத்தாமல் நடந்து கொள்ளும் ஜிபி முத்துவின் குணம் பலரையும் வெகுவாக கவர்ந்தது.
மீண்டும் வருவாரா?
இவர் தான் ஜெயிப்பார் என பலரும் கமெண்டுகள் பதிவிட்ட நிலையில், மகனுக்காக நேற்று போட்டியிருந்து வெளியேறினார்.
தனது மகனுக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும், தான் இல்லாமல் இருக்க மாட்டான் எனவும் கூறினார் ஜிபி முத்து.
இவரது இந்த செயலுக்கு பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் எழுந்துநின்று கைதட்டினர், ரசிகர்கள் பலரும் நீங்கள் தான் உண்மையான வெற்றியாளர், குடும்பத்திற்காக எதையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சில வாரங்கள் கழித்து மீண்டும் ஜிபி முத்து ரீஎன்ட்ரி கொடுப்பாரா எனவும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.