பிக்பாஸ் வீட்டிலிருந்து கண்ணீருடன் கிளம்பிய ஜிபி முத்து! வைரலாகும் காட்சி
பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்து கண்ணீருடன் விடைபெறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 9ம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி வருகின்றது.
வெளியே இருக்கும் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான போட்டியாளர் என்றால் அது ஜிபி முத்து தான். தனது எதார்த்தமான குணத்தினால் யாரிடமும் கோபம் எரிச்சல் கொள்ளாமல் இருந்து வருகின்றார்.
ஆனால் இவர் வெளியே செல்ல வேண்டும் என்று பிக்பாஸிடம் நாளுக்கு நாள் அதிகமாகவே கெஞ்சி வந்தார்.
கண்ணீருடன் விடைபெற்ற ஜிபி முத்து
இந்நிலையில் ஜிபி முத்துவிற்கு பிக்பாஸ் சர்ப்ரைஸ் கொடுப்பதாகவும், அதனால் நிகழ்ச்சியில் தொடர்ந்து இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது டுவிட்டரில் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. பிக்பாஸிடம் கண்ணீர் மல்க பேசிய அவரை, பிக்பாஸ் உள்ளே சென்று அனைவரிடமும் கூறிவிட்டு, மெயின் கதவு வழியாக வெளியே வாருங்கள் என்று கூறியுள்ளார்.
விடை பெற்றார் தலைவர் ?#GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 pic.twitter.com/JxvJV2NYSt
— RamSimbu Talks (@RamSimbuTalks) October 22, 2022