இலங்கையர்கள் மகிழ்ச்சி... ஜனனியின் நட்பு தான் வேணும்! அடம் பிடித்த GP முத்து - தீயாய் பரவும் வீடியோ
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிமிடம் முதல் ஜிபி முத்து செய்யும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தனியாக வீட்டில் இருந்த போது பயத்துடன் கமலிடம் பேசியது, மழையில் போட்ட ஆட்டம், நாய் சத்தம் கேட்டு பயந்தது என ஜிபி முத்து செய்யும் அனைத்து விஷயங்களும் ட்ரெண்டாகி வருகின்றது.
அந்த வகையில், தற்போது நடந்த ஒரு சுற்றில், உங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் யாருடைய நட்பு வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜிபி முத்து, இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனியின் நட்பு தான் வேண்டும் என கூறினார்.
இதற்காக அவர் சொன்ன காரணம் தான், தற்போது இந்தியாவை தாண்டி இலங்கை மக்களின் நெஞ்சங்களையும் வென்றுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இங்குள்ள எல்லோருக்கும் என்னை தெரியும்.
இலங்கை பெண்ணிள் நட்பு தான் வேணும்
• So Sweet #GPMuthu Anna ❤️#BiggBossTamil6 #GPMuthuArmy #JananyArmy #janany #biggboss6tamil pic.twitter.com/QfmPLp0InZ
— GPMuthuRage™ (@GPMuthuRage) October 11, 2022
ஆனால், தங்கச்சி (ஜனனி) என்ன சொன்னார் என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுடன் கலந்து கொள்ள போவதால் அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என ஜனனியிடம் சொல்லி உள்ளார்கள்.
இதனால், தங்கச்சியுடன் நட்பு மூலமா இலங்கை மக்களின் நட்பு இன்னும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என்றைக்கும் நாம் பாசமாக இருப்போம்" என்றார். தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.