நடிகை கௌரி கிஷன் உடல் எடை குறித்த கேள்வி: வருத்தம் தெரிவித்த யூடியூபர்
அதர்ஸ் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை கௌரி கிஷனிடம் வரம்பு மீறி கேள்வி சில யூடியூபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் டென்ஷனாக ரியாக்ட் செய்திருந்த கணொளிகள் இணையத்தில் தீயாய் பரவியது.
அதர்ஸ் திரைப்பட press meet
அதர்ஸ் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில், படத்தில் இந்த ஹீரோயினை தூக்கி நடித்துள்ளீர்கள். அவருடைய எடை என்ன எவ்வளவு என்ற அநாகரீகமான கேள்வியை படத்தின் ஹீரோவிடம் சில யூடியூபர்கள் கேட்டார்கள்.

அதற்கு கவுரி கிஷன், என்னுடைய எடையை தெரிந்து கொள்வதுதான் அவசியமா என தைரியமாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் இறுதியில் லேசாக கண் கலங்கினார்.
எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறித்த யூடியுபர் சொன்ன போது, நடிகை கவுரி கிஷன் நீங்கள்தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தைரியமாக கூறினார்.

கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து குறித்த விவகாரம் தொடர்பில் கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிடுகையில், "ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

இருப்பினும் சம்பந்தப்பட்ட யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம். மேலும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காதது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் R.S.கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |