PSBB பள்ளியை தொடர்ந்து... கொந்தளித்து பேசிய 96 பட நடிகை! திடீரென அடித்த அந்தர் பல்டி
பிரபல நடிகை பள்ளியில் தனக்கு வன்கொடுமை சம்பவம் நடக்கவில்லை நண்பர்களின் அனுபவத்தினையே தான் கூறியதாக தெளிவுபடுத்தி கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பின் போது தவறாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், 40க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து பிரபலங்கள், சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கௌரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த அவர், அடையாறு பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவித்ததாக தெரிவித்திருந்தார்.
நண்பர்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்த இடத்தில், தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் தவறாகக் குறிப்பிட்டிருப்பதாக, அதனை தற்போது தெளிவுப்படுத்தியிருக்கிறார் கெளரி.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ”நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் நடக்கவில்லை. ஊடகங்கள் பிஎஸ்பிபி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள். இதனை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
I’d like to clarify that I’ve not faced any kind of sexual abuse in school.
— Gouri G Kishan (@Gourayy) May 27, 2021
All other media agencies who’ve twisted the story to draw parallels with the PSBB issue, please refrain! ?
Thank you for verifying @dhanyarajendran from @thenewsminute pic.twitter.com/QN0SSsHll1