நேரடியாக NEET போராட்டத்தில் இறங்கிய தமிழ் நடிகை... குவியும் பாராட்டுக்கள்
நடிகை கௌரி கிஷன் நீட் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருவதுடன், பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
கௌரி கிஷன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவர்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 96 படத்தில் குட்டி ஜானு கதாப்பாத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
குட்டி ஜானுவாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்ட இவருக்கு 96 திரைப்படம் அறிமுகத்தை மட்டுமல்ல ஒரு அடையாளத்தையும் கொடுத்தது என்றால் மிகையாகாது.

அதனை தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்திலும், ஜானு கதாப்பாத்திரத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தினார்.
பின்னர் தனுஷுடன் கர்ணன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.அதனை தொடர்ந்து அதர்ஸ் திரைப்படத்தில் நடித்தார். இறுதியாக கௌரி கிஷன் Love Insurance Kompany திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை கௌரி கிஷன், நேரடியாகவே நீட் போராட்ட களத்தில் இறங்கி போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார். அவர் போராட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் நிலையில், பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |