ஆரோக்கியம் நிறைந்த கோவக்காய் வறுவல்... இந்த பொருளை சேர்த்து பாருங்க கொஞ்சமும் மிஞ்சாது
பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்க கூடிய கோவக்காய் ஊட்டச்சத்துக்களின் சாம்ராஜ்யம் என்று வர்ணிக்கப்படுகின்றது.
பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் இதில் அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது. என்பதை அறிந்திரந்தார்கள்.
ஆனால் இடைப்பட்ட காலத்தில் இதன் முக்கியத்துவம் வெரும்பபாலானவர்கள் மத்தியில் சரியாக அறியப்படவில்லை.
தற்காலத்தில் ஊட்டசத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்டும் அளவுக்கு அதன் மருத்து குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறித்து பரவலாக பேசப்படுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். கோவக்காய் தாவரங்கள் உடலில் குளுக்கோஸ்-6-பாஸ்பேடேஸைத் தடுக்கும் சேர்மங்களைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட கோவக்காணை கொண்டு அனைவரும் விரும்பும் வகையில் அட்டகாசமான சுவையில், எவ்வாறு கோவக்காய் பொரியல் செல்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா! லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள் எப்படியிருக்கும்?
தேவையான பொருட்கள்
கோவக்காய் - 400 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
கடுகு - 1 தே.கரண்டி
வேர்க்கடலை - 1 கைப்பிடி
குழம்பு மிளகாய் தூள் - 1 1/4 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
செய்முறை
முதலில் கோவக்காயை நன்றாக சுத்தம் செய்து சிறிய வட்ட துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்யெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய கோவக்காயைப் போட்டு நன்றாக கிளறிவிட்டு லேசாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
கோவக்காய் வெந்ததும் அதனை தனியாக ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வேர்க்கடலை சேர்த்து, நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கோவக்காயை அதனுடன் சேர்த்து கிளறி, அத்துடன் குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், சோம்பு தூள் ஆகியவற்றை போட்டு, சிறிது நேரம் வதங்கவிட்டு இறக்கினால் அவ்வளவுதான், கோவைக்காய் வேர்க்கடலை வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |