கோபிநாத் கேட்ட ஒற்றை கேள்வி.. அரங்கத்தையே கண்கலங்க வைத்த மனைவி - கணவர் தான் முக்கிய காரணமாம்
கோபிநாத் கேட்ட ஒற்றை கேள்வியால் பங்காளராக வந்திருந்த பெண்ணொருவர் அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய ஷோக்களில் ஒன்று தான் நீயா நானா.
இந்த ஷோவை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
சமூகத்தின் அடக்கு முறையால் கூற முடியாத சில விடயங்களை இரண்டு அணிகளாக பிரித்து வாதாடி அவர்களுக்கான சரியான தீர்வை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருக்கின்றது.
இதனால் இந்த ஷோக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரம் ஒற்றை குழந்தையுடன் குழந்தை இனி வேண்டாம் என தீர்மாணித்த பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்களுக்கான வாதங்கள் இடம்பெற்றன.
ஒற்றை குழந்தையுடன் நிறுத்த என்ன காரணம்?
அப்போது குறிப்பிட்ட ஒரு பெண்ணை பார்த்து கோபிநாத், “ நீங்க ஏன் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை?” என கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த பெண், “ என்னுடைய கணவர் என் குழந்தை அழும் போதெல்லாம் எழுந்து குழந்தையை நெஞ்சி சாய்த்தப்படி பார்த்து கொள்வார்.
இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையை பார்த்து கொண்டு காலையில் வேலைக்கும் செல்வார். அந்த கோலத்தில் என்னுடைய கணவரை பார்க்க என்னால் இனி முடியாது. இதன் காரணமாக தான் ஒற்றை குழந்தையுடன் நிறுத்தி விட்டோம்...” என கூறியப்படி அழுகிறார்.
இதே கேள்வியை கணவரிடம் கேட்ட போது, “ என்னுடைய மனைவி இந்த குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது சுக பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை என இரண்டு வலிகளையும் அனுபவித்து விட்டார்.
என்னுடைய மனைவிக்கு இனி அந்த கஷ்டம் வேண்டாம்..” என பதிலளித்துள்ளார். இவர்களுக்கு இருக்கும் காதல் தான் இவர்களின் இந்த முடிவிற்கு காரணம் என கோபிநாத் வாதத்தை முடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |