சிறைக்குச் சென்ற தொகுப்பாளர் கோபிநாத்! இது தான் காரணமாம்
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் திடீரென சிறையிலிருந்து வெளியில் வரும் காட்சியை பார்த்ததும் அவரின் ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்துள்ளார்கள்.
கோபிநாத்தின் தொகுப்பாளர் பயணம்
பிரபல தொலைக்காட்சியில் சமூகத்திற்கு தேவையான பல விடயங்களை காரசாரமாக விவாதித்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தவர் தொகுப்பாளர் கோபிநாத்.
இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமன்றி வானொலிகளிலும் ஆர்.ஜே வாக பணியாற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் “மக்கள் யார் பக்கம்” மற்றும் “ சிகரம் தொட்ட மனிதர்கள், நடந்தது என்ன? ” என்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
எனினும் இவருக்கென ஒரு பெயரை பெற்றுக்கொடுத்தது “நீயா நானா” தான்.
சிறையில் இருக்கும் தொகுப்பாளர்
இந்நிலையில் தொகுப்பாளர் கோபிநாத், தனியாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் நமக்கு தேவையான பல விடயங்களை பகிர்ந்து வருகிறார்.
இதன்படி, வெளிநாடு ஒன்றிற்கு சுற்றுலாச் சென்று, அங்கு கைதிகளை அடைத்து வைத்திருந்கும் சிறைச்சாலைகள் கொண்ட தனித்தீவு ஒன்று இருந்துள்ளது. அந்த தீவு “அல்கட்ராஸ்” என அழைக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் தற்போது வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு பார்வையிடுவதற்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு சென்று சிறைச்சாலையிலுள்ள சில இடங்கள் பற்றி மக்களுக்கு ரிவிவ் கொடுத்துள்ளார்.
இதன்போது சிறைக்குள் சென்று, இதில் இவ்வாறு தான் இருந்திருப்பார்கள் என ஒரு கற்பனையாக கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் சிறைக்குள் சென்றிருக்கும் கோபிநாத்தை பார்த்து பதறியுள்ளார்கள். மேலும் இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.