இழுத்து மூடப்பட்ட பாக்கியாவின் கேண்டீன்... தலைகுனிய வைத்த கோபி மற்றும் ராதிகா
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கேண்டீனை ராதிகா இழுத்து மூட வைத்துள்ள சம்பவம் ப்ரொமோவில் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்த கோபி பாக்கியாவின் சவாலில் தோல்வியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
இனியா சேர்ந்த கல்லூரியில் பாக்கியாவும் கல்லூரியில் சேர்ந்துள்ள நிலையில், சமீபத்தில் மகளை சுற்றுலா அழைத்துச் சென்று பல பிரச்சினைகளில் சிக்கி மீண்டுள்ளார்.
கைவிட்டுச் சென்ற கேண்டீன்
தற்போது கோபி மற்றும் ராதிகாவின் சதியால் கேண்டீனை இழுத்து மூடியுள்ளார். ஒவ்வொரு பிரச்சினையாக முடித்துவரும் பாக்கியாவிற்கு அடுத்து பிரச்சினை அரங்கேறி வருகின்றது.
ஒருபுறம் அமிர்தாவின் முன்னாள் கணவர் வந்திருக்கும் நிலையில், மற்றொரு புறம் செழியன் வேறொரு பெண்ணுடம் தொடர்பு வைப்பதாக கதை நகரும் நிலையில், பாக்கியாவிற்கு அனைத்து பக்கத்திலிருந்தும் பிரச்சினை எழுந்து வருகின்றது.
அடுத்து பாக்கியாவின் நிலை என்ன? எவ்வாறு இந்த பிரச்சினையை சமாளிக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |