பாக்கியாவை கட்டிப்பிடித்தபடி கோபி! ராதிகா பார்த்தால் என்னவாகும்?
மாடர்ன் உடையில் இருக்கும் பாக்கியாவை கட்டியணைத்தபடி கோபி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பாக்கியா மற்றும் கோபி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டை தற்போது ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்து வருகின்றது.
ஒரு கட்டத்தில் ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஈஸ்வரிக்கு பொலிசார் வந்து எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இதனால் இனி வரும் காட்சிகள் அனைத்தும் அதிக சுவாரசியத்துடனே செல்ல இருக்கின்றது.
தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில், பாக்கியாவின் முன்னேற்றத்தினை பார்த்து கோபி ஆச்சரியத்தில் உள்ளார். தற்போது பாக்கியா மாடர்ன் உடையில் இருக்கும் நிலையில், அவருடன் கோபி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்துடன், அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்.. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்.. மலரே மலரே ஆராதனை செய்கிறேன்.. அழகே மலரே, அழகே மலரே என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் கோபி.
இதனை அவதானித்த ரசிகர்கள் ராதிகா பார்த்தால் உங்க நிலைமை என்னவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொருவர் அப்பறம் ஏன் ராதிகாவை தேடி சென்றீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.