நெற்றில் பட்டை... கையில் கற்பூர தீபம்! கோபியின் பரிதாபநிலை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டில் இருந்த இனியா அவருக்கு குட்பை கூறிவிட்டு பாக்கியா வீட்டிற்கு வந்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வந்தார் இனியா.
ஆனால் இனியா அங்கு பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்று கடைசியில் மருத்துவமனை வரை சென்று, பின்பு கோபி வீட்டிற்கு செல்லாமல் பாக்கியா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த வருத்தத்தில் கோபி குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடக்க பாக்கியா சென்று அவரை மீட்டு ராதிகாவின் வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.
போதை தெளிந்து காலையில் எழுந்த கோபிக்கு ராதிகா பெரும் அதிர்ச்சி கொடுத்தார். ஆம் வீட்டைவிட்டு கிளம்பினார். அவரை காலில் விழுந்து கொஞ்சி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
தற்போது வீட்டின் பூஜைஅறையில் சாமி கும்பிட்டுவிட்டு வந்தவர் மீண்டும் பூஜை அறைக்கு சென்று கற்பூரத்தினை எடுத்து வந்துள்ளார். ராதிகா முன்பு கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்துள்ளார்.