தினமும் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையை இப்படி கூட பயன்படுத்தலாம்!
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சில பொருட்களை தூக்கி எறிவது வழக்கம். அவ்வாறு தூக்கி எறியும் சில பொருட்களைக் கொண்டு சில அழகு பொருட்களைப் உருவாக்கலாம்.
அவ்வாறு தான் தேங்காயை பயன்படுத்தியவுடன் தேங்காய் சிரட்டை வீசி விடாமல் கீரை வளர்ப்பதற்கு பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
தேங்காய் சிரட்டையில் கீரை வளர்ப்பு
பொதுவாகவே சிலருக்கு வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைத்து அதனில் பயனடையவே சிலர் விரும்புவார்கள். அந்தவகையில் வீடுகளில் இருக்கும் தேங்காய் சிரட்டையில் கீரைச் செடிகளை வளர்க்கலாம். எப்படி செய்வதென்றால்
முதலில் தேங்காய் சிரட்டையை நன்றாக கழுவி விட்டு அதில் தேங்காய் மஞ்சையை வெட்டி அதில் செம்மண் கலந்து சிரட்டைக்குள் போடவும்.
பிறகு தேங்காய் சிரட்டைக்குள் கீரை விதைகளை தூவி தண்ணீர் தெளித்து விடுங்கள்.
ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் இடைவெளி விட்டு கீரை விதைகள் முளைவிடத் தொடங்கும்.
இவ்வாறு விதை முளைக்கத் தொடங்கியது கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் தெளித்து விடவேண்டும்.
தேங்காய் சிரட்டையில் இருக்கும் மண்ணில் தேவையான அளவு தேங்காய் நார் துண்டுகளை போட்டு வைத்தால் தேவையான ஈரப்பதத்தை அதை தக்க வைத்துக் கொள்ளும்.
மேலும், முட்டை ஓடுகள், காய்கறிகளை நறுக்கும் போது தூக்கி எறியும் கழிவுகளை இந்த மண்ணுடன் சேர்த்துப்போட்டால் அது உரமாக மாறும்.
இது சில தினங்களுக்குப் பிறகு வளர்ந்து ஆரோக்கியமான உணவாக உங்கள் கைகளுக்கு கிடைக்கும்.