வெறும் வயிற்றில் ஒரே ஒரு நெல்லிக்காய்! இதன் ஜுஸை தினமும் குடிக்கலாமா? பலருக்கும் தெரியாத பதில்
மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவு பொருள் தான் நெல்லிக்காய். ஏழைகளின் ஆப்பிள் என்று குறிப்பிடப்படும் நெல்லிக்காவில் அதிகமான அளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது.
நெல்லிக்காய்
கொஞ்சம் அதிக புளிப்பு, கொஞ்சமான இனிப்பு, எஞ்சிய துவர்ப்பு, சற்றே கசப்பு என்றிருக்கும் நெல்லிக்கனி இன்று பரவலாக எல்லோரது வீட்டிலும் பழங்கள் காய்களுடன் நீக்கமற நிறைந்திருக்க தொடங்கியிருக்கிறது. எலுமிச்சையைத் தொடர்ந்து ராஜ கனி என்று அழைக்கப்படும் இந்த நெல்லிக்கனியின் பங்கு அளப்பரியது.
20 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த நெல்லிக்கனியின் பிறப்பிடம் ஆசிய நாடான இந்தியா மற்றும் நேபாள் தான். நெல்லிக்கனியின் மகத்துவத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய காலத்திலிருந்தே தமிழர்கள் பறைசாற்றி வந்திருக்கிறார்கள்.
புராணங்களின் படி பார்த்தால், தவறுதலாக பூமியின் மீது விழுந்த அமிர்த துளியிலிருந்து உருவானது தான் இந்த நெல்லிக்கனி என்று சொல்லப்படுகிறது.
ஆயுளை வளர்க்கும் கனி என்று அழைக்கப்படும் சிறப்பு நெல்லிக்கனிக்கு மட்டுமே உரியது. சமைத்தாலும் வேக வைத்தாலும் காயவைத்தாலும் வெட்டி நறுக்கினாலும் மொத்த பயனையும் வீணாக்காமல் தரும் சத்து மிகுந்த கனி இந்த நெல்லிக்கனி.
நெல்லிக்காயின் சத்துக்கள்
நெல்லி மரம் முழுமையும் மருத்துவக்குணங்களைக் கொண்டிருக்கிறது. சிறு சிறு இலைகள் கொண்டு கொத்துகொத்தாக காய்க்கும் சிறு நெல்லியும், பெரிய நெல்லிய அல்லது காட்டு நெல்லி இரண்டுமே நற்குணங் களைக் கொண்டிருக்கிறது. நெல்லி மரத்தின் பட்டை, வேர், இலை, பூ அனைத்துமே மருந்து பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது.
நெல்லியில் 80% நீர்ச்சத்து நிறைந் திருக்கிறது. இதனுடன் புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் இரும்புச்சத்து, பாஸ்பரம், கரோடின் பாலிபினால்,வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்திருக்கிறது.
ஆரஞ்சுப்பழத்தைவிட 20 மடங்கு வைட்டமின் சி சத்து இருக்கிறது. ஆப்பிளை விட 3 மடங்கு புரதச்சத்து நெல்லி யில் இருக்கிறது. உடலில் இரும்புச்சத்து கிரகிப்பதை நெல்லிக்காய் ஊக்கப்படுத்துகிறது.
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது, நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது.
நெல்லிக்காயில் நீர்ச்சத்து-82%
புரதசத்து -0.5%
கொழுப்பு -0.1%
மாவுப்பொருள்-14%
நார்ச்சத்து-3.5%
கால்சியம்-50யூனிட்
பாஸ்பரஸ்-20 யூனிட்
இரும்பு-1.2 யூனிட்
வைட்டமின் சி-600 யூனிட்
போன்றவை 10 கிராம் நெல்லிச்சாறில் இருக்கும் சத்துகள் ஆகும்.
இதயத்திற்கு ஆரோக்கியம்
நெல்லியில் இருக்கும் குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதய வால்வுகளில் இரத்தக்குழாய்க ளில் ஏற்படும் அடைப்புகளை சீராக வைக்கிறது. மாரடைப்பு வருவதை தடுக்கிறது. இதயத்துக்கு வலு கொடுக் கிறது.
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
நம் உடலின் ஒவ்வொரு வளர்சிதை மாற்றத்தின் போது செல்களில் இருந்து நச்சுக்கள் வெளியேறவேண்டும், இது நடைபெறாத பட்சத்தில் உடலில் கட்டிகள் தோன்றி புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும், மேலும் புற்றுநோயை உண்டாக்கூடிய செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
கொழுப்பைக் குறைக்கிறது
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் புரதச்சத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு நெல்லிக்காய் நிச்சயம் பலன் தரும்.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்
நெல்லிக்காயில் குறைந்த அளவிலேயே சர்க்கரை சத்து இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம், இன்சுலின் ஹார்மோன் சுரப்பிற்கும் உதவுகிறது, அல்சர் நோயால் அவதிப்படும் நபர்கள் தினமும் நெல்லிக்கனி சாற்றை அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சிறுநீரகம்
இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் வேலையைச் செய்கிறது.
சிறுநீரகம் வெளியேறுவதில் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த சிறுநீர் பெருக்கியாக நெல்லிச்சாறு செயல்படுகிறது.
அதிகப்படியான நீர்ச்சத்துக்களைக் கொண்டிருக்கும் நெல்லிக்கனி சிறுநீரகத்தில் படியும் சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதைத் தடுத்து அவற்றைக் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றது.
எலும்புகள் வலுப்பெறும்
எலும்பின் வளர்ச்சிக்கும், வலுவிற்கும் தேவையான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம் சத்துகளும் நெல்லிக்காயில் அதிகம் இருக்கின்றது.
எனவே வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நெல்லிக்காய்களை சாப்பிட்டு வருவது நல்லது.
ஹீமோகுளோபின் அதிகரிக்கும்
இன்று பெரும்பாலானோருக்கு ஹீமோகுளோபின் அளவு மிக குறைவாக இருக்கிறது. இதனால் உடல் சோர்வு, மன சோர்வு என்று பாதிக்கப்படுகிறார்கள்.
நெல்லிச்சாறுடன் தேன் கலந்து அல்லதுதேன் கலந்த நெல்லியை தினமும் சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்ட மாதத்தில் ஹீமோகுளொபின் அளவு அதிகரிப்பதை பரிசோதனையில் உறுதி செய்துகொள்ளலாம்.
தெளிவான பார்வை
நெல்லிக்கனியின் சாறு, தெளிவான கண்பார்வைக்கு மிகவும் பயன்படுகிறது, குறிப்பாக வயதான காலத்தில் எல்லோருக்கும் ஏற்படுகிற macular degeneration பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான அமைப்பு நன்றாக செயல்பட உதவுகிறது, ஏதாவது உணவினை சாப்பிட்டுவிட்டு அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டால் நெல்லிக்காய் சாற்றினை அருந்துங்கள்.
இளநரை பிரச்சினைக்கு தீர்வு
ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுகிறது. இதனை வெயிலில் காயவைத்து பொடி செய்து முகத்தில் பூசி வர முகப்பரு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும். தொடர்ந்து நெல்லிக்காய் சாற்றை அருந்தி வர தோலின் நிறத்தில் படிப்படியாக மாற்றம் ஏற்படும்.
இளநரையை போக்க நெல்லிக்காய் பொடியை நீர்விட்டு குழைத்து தலையில் பூசி வர பலன் கிடைக்கும். நெல்லிக்காய் கலந்த எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்துவதால் கூந்தல் நீளமாகவும் பளபளப்பாகவும் வளர்கிறது.
பொடுகு மற்றும் அது சார்ந்த தொல்லைகளை நீக்கவும் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
எவ்வாறு சாப்பிடலாம்?
ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.
தினமும் சாப்பிடலாமா?
இவ்வாறு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் நெல்லிக்காய் ஜுஸை தினமும் குடிக்கலாமா என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசிக்க பலரும் கூறுவார்கள்.
இதற்கு காரணம் ஜுஸாக சாப்பிடும் போது நெல்லிக்காயின் அளவு அதிகரிக்கின்றது. மேலும் நம் உடம்புக்கு வைட்டமின் சி குறைவாகவே தேவைப்படுகின்றது.
ஆனால் நெல்லிக்காய் ஜுஸில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படுமாம்.
