பற்கள் செயலிழந்து ஆடுகிறதா ? அப்போ தினம் இந்த ஒரு காய் போதும்
மனிதர்களுக்கு 8 வெட்டுப்பற்கள், 4 கோரைப்பற்கள்; 8 முன்கடைப்பற்கள்; 12 கடைப்பற்கள் என மொத்தமாக பற்களின் எண்ணிக்கை 32 ஆக காணப்படுகின்றது.
இந்த பற்களை ஆரோக்கியமாக பாதுகாப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். இப்படி இருக்கையில் இது சில சமயத்தில் ஈறுகளில் பலன் இல்லாமல் ஆடிய நிலையில் இருக்கும்.
இப்படி ஆடுகின்ற பற்களை ஆரோக்கியமான உணவின் மூலம் எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பற்கள்
பற்கள் ஆடுவதற்கான காரணம் அவர்களின் ஈறுகள் பலவீனம் அல்லது எலும்பு இழப்பு போன்ற காரணத்திற்காக பற்கள் ஆட்டம் காணலாம்.
சிலர் வாய் சுகாதாரத்தை சரிவர பேணாததால் பற்களின் ஈறுகளில் பக்றீரியாக்கள் வளர்ந்து அது ஈறுகளை பலவீனமாக்குவதால் பற்கள் ஆடுகின்றன.
சிலர் அதிகமான இனிப்பு உணவு சாப்பிடுவது, பற்கள் சிதைவடைவது போன்ற காரணங்களுக்காகவும் பற்களில் ஆட்டம் காணலாம்.
இதற்காக சமையலில் நீங்கள் பூண்டு, மிளகு, மஞ்சள் போன்றவைகளை சமையலில் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் தொற்றுக்கள் அண்டாமல் பற்களை பாதுகாக்கலாம்.
நீங்கள் தினமும் காலையில் நெல்லிக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்ள வேண்டும். நெல்லிக்காய் பற்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த மருந்தாகும்.
இதற்கு நீங்கள் நெல்லிக்காய் இடித்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்கலாம். அல்லது நெல்லிக்காயை தினமும் மென்று சாப்பிட்டு வந்தாலே பற்கள் உறுதிபெறும்.