ஸைபடர்மேன் அவதாரம் எடுத்த பூனை.. சுவரில் கடகடவென நடந்து சென்ற அதிசயம்!
ஸைபடர்மேன் அவதாரம் எடுத்த பூனையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவைகளாக இருக்கின்றது. அதிலும் சில விலங்குகள் வீட்டில் ஒருவராகவே மாறி விடுகின்றன.
வீட்டில் தனியாக இருப்பவர்கள் இவ்வாறான பிராணிகளை வளர்ப்பதால் மன அழுத்தம், தனிமை ஆகிய பிரச்சினைகளிலிருந்து விடுபெறலாம்.
நாம் கவலையாக இருக்கும் பொழுதும் சரி, சந்தோசமாக இருக்கும் பொழுதும் சரி எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ளும் ஓரே ஜீவன் விலங்குகள் தான்.
அந்த வகையில் பூனையொன்று கடகடவென ஏறி சுவரின் உச்சத்திற்கு சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வைரல் காட்சி
அதாவது மூன்று பூனைகளின் மீது லேசர் ஒளி படும் படி ஒருவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த ஒளியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என மூன்று குட்டி பூனைகளும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
லேசர் ஒளியை சுவரில் மேல் கொண்டு செல்ல அதிலிருந்த ஒரு குட்டி பூனை மாத்திரம் ஒளியை தொடர்ந்து எந்த சிரமமும் இல்லாமல் சுவரின் மீது ஏறிச் செல்கிறது.
இருப்பினும், மற்ற இரண்டு பூனைகளும், இது எப்படி சாத்தியம் என சந்தேகத்துடன் பூனையைப் பார்த்துக் கொண்டிருந்தன.
இந்த காட்சியை பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |