ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்! எப்படி?
கூகுள் தொலைபேசியிலேயே அழைப்பாளர் விவரங்களை அறிந்துகொள்ள ஒரு புதிய அம்சத்தை இணைத்துள்ளது.
இதனால், அழைப்பாளரின் பெயர் மற்றும் எண்ணை ட்ரூகாலர் போல பயனர்களால் முன்கூட்டியே அறிந்துக்கொள்ள முடியுமாம்...
கூகுள் (Google) இன் இந்த புதிய அம்சமானது பயனாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பதற்கும், பாடல்கள், முக்கிய ஒலிநாடாக்களை கேட்டுக்கொண்டிருக்கும்போது வரும் அழைப்புகளை துண்டிப்பதற்கும் அழைப்பாளர் விவரங்களை தெரிவிக்கும் அம்சம் பெரிதும் உதவியாக உள்ளது.
இந்த அம்சத்தைப் பெற கூகுள் போனில் செட்டிங் காலர் ஐடி (Caller ID), (announcement) பிரிவில் சென்று பெற முடியும்.
இதில் எப்போதுமே காலர் ஐடிக்களைத் தெரிவிக்க வேண்டும். ஹெட்செட்களை உபயோகிக்கும்போது மட்டும் தெரிவிக்க வேண்டும், காலர் ஐடிக்களைத் தெரிவிக்க வேண்டாம் என மூன்று உள்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கூகுள் போனில் மட்டுமல்லாது, மற்ற ஆன்டிராய்ட் செல்போன்களிலும் இந்த அம்சம் கூகுள் செயலி மூலம் வழங்கப்படுகிறது. ஆன்டிராய்ட் செல்போன்களில் அவை இயல்புநிலை டயலர்களாகவும் இருக்கின்றன.
புதிய அம்சம் பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.