விரைவில் வெளியாகும் ஐபோன் 16 சீரிஸ்... வெளியே லீக்கான தேதி
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வெளியிடப்படும் தேதியை பிரபல நிறுவனம் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.
Apple iPhone 16 சீரிஸ்
ஐபோன் சந்தையில் முன்னணியில் இருந்து வரும் ஆப்பிள் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிள் நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய ஆப்பிள் வாட்ச், ஏர்பாட் மாடல்களை வெளியிடும் என்றும், இந்த ஆண்டு வெளியாகும் ஆப்பிளின் ப்ரோ மாடல்கள் சற்று பெரிய டிஸ்ப்ளைஐய கொண்டிருக்கும் என்று கூறியுள்ளது.
அதே போன்று ஐபோன் 16 மொபைல்களில் கமெராவிற்காக பிரத்யேகமாக Capture Button ஒன்றும் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த தயாராகியுள்ளதாகவும், செப்டம்பர் 20ம் தேதி இதன் விற்பனை தொடங்கும் என்று ப்ளூம்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளது.
iPhone 16 , iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா இருக்கும் என்றும் முந்தைய மாடல்களைவிட பெரியதாகவும், பேட்டரியும் பெரிய அளவில் இருக்குமாம்.
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுக்கு மட்டும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆப்பிள் AI அம்சங்களுக்கான அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 16 வரிசையில் உள்ள நான்கு மாடல்களும் அறிமுகமாகும்போதே ஆப்பிளின் புதிய AI தொழில்நுட்பத்துடன் கிடைக்கும். இந்தப் புதிய அம்சங்கள் ஐபோன் 16 மாடல்களின் விற்பனையை அதிகரிக்க உதவும் என்ற எதிர்பார்ப்பில் குறித்த நிறுவனம் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |