மில்லியன் கணக்கான ஜிமெயிலை முடக்கும் Google... யாரோட ஜிமெயில் காலியாகும்னு தெரியுமா?
ஜிமெயில் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை கூகுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முடக்கப்படும் ஜிமெயில்
இன்று உலகில் பெரும்பாலான மனிதர்கள் ஜிமெயில் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து இடங்களுக்கும் அத்தியாவசியமாக மாறிவரும் இந்த ஜி மெயில் டிசம்பர் மாதம் மில்லியன் கணக்கில் முடக்கப்படுமாம்.
டிசம்பர் மாதத்தில் அதாவது ஜிமெயில் வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்தால், இதனை செயலிழக்க முக்கிய காரணமாக இருக்கின்றது.
இதனால் மில்லியன் கணக்கான கணக்குகள் செயலிழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கூகுள் தயாரிப்பு நிர்வாகத்தின் துணைத் தலைவர் Ruth Kricheli கூறுகையில், கூகுள் நிறுவனம் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறைந்தது 2 ஆண்டுகளாக Google கணக்கைப் பயன்படுத்தாமலோ அல்லது உள்நுழையாமலோ இருந்தால், Google Workspace (Gmail, Docs, Drive, Meet, Calendar) மற்றும் Google Photos இல் உள்ள உள்ளடக்கம் உட்பட கணக்கையும் அதன் உள்ளடக்கங்களையும் நாங்கள் டெலீட் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆய்வின் படி, இரண்டு அடுக்கு கடவுச்சொல் இல்லாத கணக்குகள் இணைய மோசடி காரர்களின் இலக்காக இருப்பதாக தெரியவந்துள்ளது.
கணக்கை செயலில் வைத்திருப்பது எப்படி
கூகுள் வலைப்பதிவு இடுகையின்படி, கூகுள் கணக்கை செயலில் வைத்திருக்க எளிய வழி குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை உள்நுழைவதாகும்.
நீங்கள் சமீபத்தில் உங்கள் Google கணக்கு அல்லது எங்கள் சேவைகளில் உள்நுழைந்திருந்தால், உங்கள் கணக்கு செயலில் உள்ளதாகக் கருதப்பட்டு நீக்கப்படாது என்று கூகுள் அறிவித்துள்ளது.
உங்கள் Google கணக்குடன் Google One, செய்தி வெளியீடு அல்லது ஆப்ஸ் போன்ற செயலில் உள்ள சந்தா இணைக்கப்பட்டிருந்தால் உங்களது கணக்கு நீக்கப்பட மாட்டாது.
மேலும், யூடியூப் வீடியோக்களுடன் தொடர்புடைய கணக்குகளை நீக்க கூகுளுக்கு தற்போதைய எண்ணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |