சென்சேஷனல் நடிகை பிரியா வாரியருக்குள் இப்படி ஒரு திறமையா? வாயடைத்துப்போன ரசிகர்கள்
குட் பேட் அக்லீ படம் மூலம் சென்சேஷனல் நடிகையாக மாறிய பிரியா வாரியர் ட்ரெண்டிங் பாடலை அசத்தலாக பாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
பிரியா வாரியர்
ஒரு அடார் லவ்' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகை பிரியா வாரியர்.
தனுஷ் இயக்கி வெளியான 'NEEK' படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து,அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லீ திரைப்படத்தில் ஒரு முக்கிய காதாப்பாத்திரத்தில் தோன்றி சென்சேஷனல் நடிகையாக மாறினார்.
இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இப்படத்தில் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலில் இவர் ஆடிய நடனம் படு வைரலானால், அதன் பின்னர் இணையத்தில் அதிகம் தேடப்டும் நடிகையான பிரியா வாரியர் இருக்கின்றார்.
சினிமாவில் மாத்திரமன்றி சமூகவலைத்தளங்களிலும் அதிகம் ஆர்வம் காட்டிவரும் இவர், ட்ரெண்டிங் பாடலை தனது பாணியில் அசத்தலாக பாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
