3.2 கோடி பார்வையாளர்களை கடந்த குட் பேட் அக்லி டீசர்- அஜித்தின் ஆட்டம் ஆரம்பம்
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் 3.2 கோடி பார்வையாளர்கள் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
குட் பேட் அக்லி திரைப்படம்
தமிழ் சினிமாவில் உள்ள தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம், நினைத்த அளவு வெற்றி தரவில்லை. இருந்த போதிலும் சுமாரான வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும்,“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் இரவு வெளியானது.
3.2 கோடி பார்வைகளை கடந்த டீசர்
இந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக வெளியாகி வெற்றி நடைப்போடும் இந்த டீசர், அஜித் குமாரின் முந்தைய கல்ட் கிளாசிக் படங்களைப் பிரதிபலிப்பதாக இருப்பதோடு, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் டீசர் 19 மணி நேரத்தில் 2.5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், 827 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், “இனி வரும் காலங்களில் அஜித்தின் திரைப்படங்கள் பலத்த வெற்றியை பெறுமா?” என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |