gonorrhea symptoms: கோனோரியா என்றால் என்ன? இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும்
பொதுவாக ஆண் பெண் என இருபாலாரையும் தாக்கும் நோய் நிலைமைகளில் கோனோரியா முக்கிய இடம் வகிக்கின்றது.
இது பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு தொற்று ஆகும். நைசீரியா கோனோரியா எனும் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இந்த நோய் ஆண், பெண் இருவரிலும் சம அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இந்த நோய் ‘கிளாப்’ அல்லது ‘டிரிப்’ என்றும் அழைக்கப்படுகின்றது. சிறுநீர்க்குழாய், மலக்குடல் மற்றும் தொண்டைபகுதி கோனோரியாவால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றது. குறிப்பாக பெண்களில் கோனோரியா தாக்கமானது கருப்பை வாயையும் வலுவாக பாதிக்கின்றது.
கோனோரியா தாக்கம் பெருமட்பாலும் உடலுறவின் போதே ஏற்படுகின்றது. இனப்பெருக்க பாதை போன்ற உடலின் சூடான மற்றும் ஈரமான சளி சவ்வுகளில் எளிதில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படும்.
பெண் உடலில் கருப்பை வாய், கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்கள் மற்றும் சிறுநீர் பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது போல் ஆண்களிலும் சிறுநீர் குழாய் வாய், தொண்டை மற்றும் ஆசனவாயில் இது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
உடலுறவின் போது ஏற்படும் இந்த கோனோரியா தொற்றின் அறிகுறிகளை கண்றிவது மிகவும் கடினமானதாக இருக்கும்.
இது ஒரு சிக்கலான நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு அதன் அறிகுறிகள் விரைவில் வெளித்தெரிவது கிடையாது. அதனால் சிகிச்சை பெறுவதும் மிகவும் குழப்பமானதாக இருக்கும்.
பெண்களில் அறிகுறிகள் என்ன?
- காய்ச்சல்
- வயிறு வலி அல்லது அசௌகரியம்
- யோனி வெளியேற்றத்தில் அதிக துர்நாற்றம்
- வழக்கத்துக்கு தாறாகஅடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்
- சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்
- தொண்டை வலி
- உடலுறவின் போது யோனி வாயில் கடுமையான வலி
ஆண்களில் தோன்றும் அறிகுறிகள்
- அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்
- சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்
- ஆண்குறியில் இருந்து மஞ்சள் அல்லது பச்சை வெளியேற்றம்
- தொண்டை வலி
- வீங்கிய மற்றும் வலிமிகுந்த விந்தணுக்கள்
கோனோரியா குறிகுறிகளை அலச்சியப்படுத்துவது உடல்நலப் பிரச்சினைகளையும் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பெண்களில் ஏற்படும் கோனோரியா தொற்று பெரும்பாலும் ஈஸ்ட் தொற்று என்று தவறாக புரிந்துக்
பொதுவாக தொற்றுக்குப் பிறகு 5-7 நாட்களுக்குப் பின்னரே அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றது.
வாய்வழி உடலுறவு காரணமாக தொண்டையில் இந்த தொற்று ஏற்படுகின்றது. தொண்டையில் எரியும் உணர்வு தொண்டையில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடநடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்
ஆணுறை மற்றும் முறையான சுகாதார முறையை பின்பற்றாத உடலுறவு மற்றும் பல பாலியல் கூட்டாளர்களுடன் உறவு கொள்ளுதல்.
ஏற்கனவே கோனோரியா தொற்றால் பாதிக்கப்பட்ட துணையுடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்வது.
கர்ப்பிணித் தாய்க்கு இந்த தொற்று ஏற்பட்டால், பிறக்காத குழந்தைக்கு நோய்த்தொற்றைக் கடத்தலாம்.
அதன் விளைவாக முன்கூட்டிய பிரசவம், தன்னிச்சையான கருக்கலைப்பு முதல் குருட்டுத்தன்மை, மூட்டு தொற்று அல்லது குழந்தைக்கு ஆபத்தான இரத்த தொற்று போன்ற அபாயகரமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க சுகாதார முறையான மற்றும் பாதுகாப்பான முறையில் உறலுறவில் ஈடுப்படுவதை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |