இந்த பொருட்களில் கழிப்பறை இருக்கையை விட அதிக கிருமிகள் இருக்கா? இனிமேல் ஜாக்கிரதை!
பொதுவாக நமது கண்ணுக்கு தெரியும் அத்தனையும் உண்மையும் கிடையாது, கண்ணுக்கு தெரியவில்லை என்பதற்காக பொய் என்றும் கூறிவிட முடியாது.
அதுபோல் நாம் அன்றாடம் மிகவும் தூய்மையாக இருப்பதாக நினைத்துக்கொண்டு பயன்படுதும் பல பொருட்களில் கழிப்பறை இருக்கையை விடவும் அதிக கிருமிகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் அப்படி நோய்களை ஏற்படுத்த கூடிய அபாயகரமான கிருமிகள் நிறைந்திருக்கும் ஒருசில பொருட்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மொபைல் போன்: நாம் சுத்தமாக இருப்பதாக நினைத்து அன்றாடம் நமது படுக்கை மற்றும் சாப்பாட்டு மேசை வரையில் கொண்டு செல்லும் மொபைல் போன்களில் கழிப்பறை இருக்கையில் இருப்பதை பார்க்கிலும் சுமார் 10 மடங்கு அதிக நோய்கிருமிகள் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவருகின்றது.
மொபைல் போனை கைகளில் வைத்திருக்கும் போது பாக்டீரியாக்கள் தொடர்ந்து குவிந்து கொண்டே தான் இருக்கும் அதனை நாம் சுத்தம் செய்வதே கிடையாது. அதில் அதிக நோய் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் தங்கியிருக்கும்.
பணம்: நாம் அன்றாடம் பல்வேறு தேவைகளுக்கு பணத்தை நிச்சயம் பயன்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஆனால் காலணி, கழிப்பறை இருக்கை ஆகியவற்றில் இருக்கும் அதே அளவிலான கிருமிகள் பணத்திலும் இருப்பதாகக் கண்டறிப்பட்டுள்ளது.
காய்கறி நறுக்கும் பலகை: கழிப்பறை இருக்கையை விடவும் காய்கறி வெட்டும் பலகையில் 200 மடங்கு பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அதில்தொடர்ந்து காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகள் வைத்து வெட்டப்படுவதால் அதில் அதிக கிரமிகள் தங்கிவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது. சமையலின் போது அதனை உரிய முறையில் கிருமி நீக்கம் செய்ய வேண்டியது அவசியம்.
லேப்டாப்பின் விசைப்பலகை: ஆய்வின்படி, ஒரு சதுர அங்குல விசைப்பலகையில் 3,000 பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படுவதாக தெரியவருகின்றது. எனவே ஒவ்வொரு முறையும் விசைப்பலகையை பயன்படுத்தும் முன்னரும் பின்னரும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மேலும் வாரம் ஒருமுறையாவது விரைப்பலகையை முறையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
குழாய்கள்: கழிவறை இருக்கையை விடவும் வீட்டில் உள்ள நீர் குழாயில் 44 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவற்றை தினசரி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
மவுஸ்: மவுஸ் பாக்டீரியாக்களின் இருப்பிடம் என்று கூறும் அளவுக்கு நோய்கிருமிகள் நிறைந்து காணப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. ஒரு மவுஸில் ஒரு சதுர அங்குலத்திற்கு 1500 பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டூத்ப்ரஷ்: ஈரமாக இருக்கும் டூத்பிரஷில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை படிப்படியாக வளர ஆரம்பித்து அதில் ஏராளமான பாக்டீரியாக்கள் குவிந்து காணப்படுகின்றது. அதனை முறையாக உலர்த்தி வைக்காவிடில் நோய் ஆபத்து ஏற்படுவது உறுதி.
அது போல் டிவி ரிமோட் ,குளியலறை கதவின் கைப்பிடிகள், ஃப்ரிட்ஜ் கைப்பிடிகள் என்பவற்றிலும் அதிக நோய்கிருமிகள் தங்கியிருக்கின்றன. அதனை பார்க்கும் போது சுத்தமாக இருப்பது போல் தோன்றினாலும் அவற்றை முறையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டியது இன்றியமையாதது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |